"இந்த 114 வருஷத்துல இப்படி நடக்குறது இதான் முதல் தடவை!"... கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நேரும் பங்கம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கம் ஆரவாரமின்றி ஆள்நடமாட்டம் இன்றி இருக்கும் என்று நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் இந்த முக்கிய முடிவை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக நிர்வாகத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்படுவது என்பது உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு மிட் டவுன் மன்ஹாட்டன் தெருக்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்.

அதுமட்டுமன்றி டைம்ஸ் சதுக்கத்தில் நிகழும் புத்தாண்டு நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் பில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி நியூயார்க் நகர போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்கு கீழ் டைம்ஸ் சதுக்கம் கொண்டு வரப்படும் என்றும், விழா நிகழ்வுகள் நேரலையில்  இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என்பதால், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கூட்டத்தை மட்டும் டைம்ஸ் சதுக்கத்தில் அனுமதிக்கவும் முடிவு செய்யபட்டுள்ளது. அத்துடன் ஒளிபரப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமே டைம்ஸ் சதுக்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது. மக்கள் கூட்டம் ஏதுமின்றி டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாடுவது என்பது இந்த 114 ஆண்டுகளில் முதல் முறையாக நிகழ்கிறது என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்