மறுபடியும் 'மொதல்ல' இருந்தா?... 30 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கையால்... 'அதிர்ந்து' போய் நிற்கும் நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு அந்நாட்டில் இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் கொரோனாவுக்கு அதிகளவில் பலியாகி வருகின்றனர். உலகளவில் முதன்முதலாக கொரோனாவுக்கு அதிகளவில் இத்தாலி மக்கள் தான் பலியாகினர். 

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகளை சந்தித்ததும் இத்தாலி தான். மக்களை அடக்கம் செய்யக்கூட வழியின்றி அந்நாடு ராணுவ உதவியை நாடியதை பார்த்து உலக நாடுகள் அதிர்ந்து போயின. ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல, அமெரிக்காவில் பரவிய வேகத்திலேயே கொரோனா கொத்துக்கொத்தாக மக்களை அழித்தது. கொரோனாவுக்கு இதுவரை 80 ஆயிரம் பேர் அங்கு பலியாகி இருக்கின்றனர். இதையடுத்து இங்கிலாந்து நாட்டில் வேகமாக பரவிய கொரோனா இதுவரை அங்கே 31,241 பேரை பலிவாங்கி உள்ளது. 

மறுபுறம் இத்தாலியில் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டதாக பலரும் நினைத்து கொண்டிருக்க மீண்டும் கொரோனா அங்கு வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. புதிதாக 243 பேர் அங்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் இத்தாலியில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது(30,201). நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில், மீண்டும் கொரோனா இத்தாலியில் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்