"105 குழந்தைங்கள வளக்கணும்".. அலாதி பிரியத்தால் தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைங்க பிறந்ததும் திடீர்ன்னு நடந்த 'ட்விஸ்ட்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜார்ஜியாவின் படுமி என்னும் பகுதியில் வசித்து வருபவர் Kristina Ozturk. இளம்பெண்ணான இவர், Galip Ozturk என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார்.
கிறிஸ்டினா மற்றும் கலீப் தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். இதன் காரணமாக, இருவரும் இணைந்து, 105 குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக, 105 குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்து அவர்கள் அனைவரையும் வளர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, முதல் கணவர் மூலம் கிறிஸ்டினாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம், கிறிஸ்டினா - கலீஃப் ஜோடி, மொத்தம் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது.
இதற்காக, வாடகை தாய்க்கென மட்டுமே, சுமார் 1,68,000 யூரோ தொகையை அவர்கள் செலவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 22 குழந்தைகள் தற்போது மொத்தமாக அவர்களுக்கு உள்ள நிலையில், 105 குழந்தைகளை பெற வேண்டும் என்றும் தொடர்ந்து விருப்பப்பட்டும் வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
பிரபல தொழிலதிபரான கலீப், பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதகவும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். 105 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் இலக்காக கொண்ட நிலையில், தற்போது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், கனவு மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கை கூட ஸ்தம்பித்து போனதாக கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசும் கிறிஸ்டினா, தனது கணவரான கலீப் வருகைக்காக காத்திருப்பதாகவும், அந்த நாள் விரைவில் வரும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதே போல, இப்படி ஒரு நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களும் நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் இத்தனை குழந்தைகள் இருந்தும், அவரது கணவர் கலீப் இல்லாமல் இருப்பதும், அவரது குரலை கேட்காமல் இருப்பதும் தாங்கிக் கொள்ள முடியாமலும் கிறிஸ்டினா அவதிபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், வீட்டிலுள்ள அனைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவும் வேலையாட்கள் நிறைய பேரை கிறிஸ்டினா பணிக்கு அமர்த்தி உள்ளார். அதே போல, 22 குழந்தைகளின் செலவு என்பது வாரத்திற்கு சுமார் 4,000 யூரோக்கள் மேல் வரை ஆகும் என்றும் கிறிஸ்டினா குறிப்பிட்டுள்ளார்.
கணவர் தற்போது கைதாகி உள்ள காரணத்தினால், 105 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்கை சிறிது காலத்திற்கு மாற்றியும் வைத்துள்ளார் கிறிஸ்டினா.
Also Read | "37 லட்சம் வரி பாக்கி இருக்கு".. கூலி தொழிலாளிக்கு வந்த நோட்டீஸ்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்.. காதலியை கரம்பிடித்த வாலிபர்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் பலரையும் திகைக்க வச்சிருக்கு..!
- "டெய்லி ரூ.10 லட்சம் வர லாபம் பார்க்கலாம்.." குடும்பமாக போட்ட பகீர் பிளான்.. திடுக்கிட வைக்கும் மோசடி!!
- 19 வயது வித்தியாசம்.. காதலிச்சு திருமணம் செஞ்ச 'ஜோடி'.. பொண்ணோட அம்மா'வ பாத்ததும் மாப்பிள்ளைக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!
- "வெளிநாடு போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்.." உற்சாகமா கிளம்பிய ஜோடி.. விமான நிலையத்தில் மாயமான பெண்?!.. அதிர்ச்சியில் வாலிபர்
- "கல்யாணம் ஆகி 54 வருஷம் ஆயிடுச்சு.." மூன்றாவது முயற்சியில் நடந்த அதிசயம்.. உச்சகட்ட ஆனந்தத்தில் 70's தம்பதி
- 35 வருஷமா அமெரிக்க காவல்துறைல இருந்த உளவாளி?.. இவ்வளவு நாளுக்கு அப்பறம் சிக்கிய தம்பதிகள்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரே போட்டோ தானாம்.!
- வாடகை வீட்டை உரிமை கொண்டாடிய பெண்.. மனைவியுடன் மாடிப்படியில் தஞ்சம் அடைந்த உரிமையாளர்.. கடைசில நடந்த சூப்பர் டிவிஸ்ட்..!
- "என்னது, எல்லா குழந்தைக்கும் இப்டி தான் பேரு வெச்சு இருக்காங்களா??.." வியப்பை ஏற்படுத்திய தம்பதி..
- "இப்டி ஒரு அன்புக்கு தான்யா ஏங்கிட்டு இருக்கோம்.." சில்லென மழையிலும் சிலிர்க்க வைத்த தள்ளாடும் தம்பதி.. நெட்டிசன்களை உருக வச்ச வீடியோ..
- "புதுசா வீடு வாங்கி, வேல பாத்தப்போ.." தரைக்கு அடியில் கிடந்த பொருள்.. "ஒரு நிமிஷம் அந்த தம்பதிக்கு அள்ளு விட்டுருச்சு"