வீட்டு கழிவறையில் கேட்ட 'வித்தியாச' சத்தம்.. என்னடான்னு பயத்துலயே போய் பாத்தா.. தம்பதிக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, நாம் அவசரத்துக்காக ஒரு பொருளை தேடும் போது, நமது கண்ணில் புலப்படாது. சில நேரம், நமது அருகே இருந்தாலும் அந்த பொருள் நமக்கு கிடைக்காமல் போகலாம்.

Advertising
>
Advertising

"நீங்க அதுக்கு பயப்படுறீங்க.." இங்கிலாந்து பிரதமரிடம் சரமாரி கேள்விகள்.. கண்ணீர் மல்க முன் வைத்த பெண் பத்திரிகையாளர்.. பின்னணி என்ன?

இது பெரும்பாலான ஆட்களுக்கு நடக்கும் சம்பவம் தான். ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த ஒரு பொருள், மீண்டும் உங்கள் கையில் கிடைத்தால் எப்படியிருக்கும்.

கழிவறையில் கேட்ட சத்தம்

அப்படி ஒரு சம்பவம் தனக்கு நிகழ்ந்ததாக, மேரிலாந்து பகுதியைச் சேர்ந்த பெக்கி பெக்மேன் என்ற பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது வீட்டில் உள்ள கழிவறையில் கடந்த சில நாட்களாகவே, ஃபிளஷ் செய்த பின்னர், தண்ணீருடன் ஏதோ ஒரு கலகலவென சத்தம் ஒன்று கேட்டுள்ளது. ஒவ்வொரு முறையும், கழிவறையை பயன்படுத்தும் போதெல்லாம், அப்படி ஒரு வினோத சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது.

என்ன சத்தம்?

சற்று அதிரும் வகையில், அந்த சப்தம் அமைந்துள்ள நிலையில், பெக்கி மற்றும் அவரது கணவர் சற்று பதற்றம் அடைந்துள்ளனர். கழிவறை பழையதாக இருப்பதாலும், கட்டுமான பணிகளை சரி வர செய்யாததன் காரணத்தினாலும், அந்த சப்தம் ஏற்பட்டிருக்கலாம் என பெக்கி மற்றும் அவரது கணவர் முதலில் நினைத்துள்ளனர். மேலும், அந்த வெஸ்டர்ன் டாய்லட்டை பழுது பார்க்கவும், பெக்கியின் கணவர் முடிவு செய்துள்ளார்.

தொலைந்து போன 'ஐ போன்'

அப்படி, அதனை பழுது பார்த்த போது, அவர்கள் இருவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், பெக்கி தொலைத்த ஐ போன் அதற்குள் கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது, ஓரளவுக்கு நல்ல கண்டிஷனில் இருந்ததாகவும் பெக்கி தெரிவித்துள்ளார். டாய்லெட் பைப்பில் இருந்த காரணத்தினால், அதன் உட்புறம் எதுவும் ஆகாமல் இருந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்து வருடத்துக்கு முன்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ஐ போனை தொலைத்துள்ளார் பெக்கி. அதனை வீடு முழுக்க தேடியும் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், தன்னுடைய போனை அவர் வீட்டை விட்டு எங்கேயும் கொண்டு செல்லவில்லை என்ற நிலையில், போன் எங்கு தொலைந்திருக்கும் என்ற குழப்பத்தில் தேடி பார்த்து சலித்து போனார் பெக்கி.

நெட்டிசன்கள் கருத்து

ஒரு வேளை அதனை யாராவது திருடி இருக்கலாம் என்றும் பெக்கி முடிவு செய்துள்ளார். இறுதியில், புதிய போன் ஒன்றை பெக்கி வாங்கிக் கொண்டதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, தன்னுடைய தொலைந்து போன ஐபோன், வீட்டு கழிவறையில் கிடைத்ததை தற்போது பகிர்ந்துள்ளார். இது பற்றி, இணையவாசிகள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"எது ரெய்னா ஐபிஎல் ஆட போறாரா?.." ட்விட்டரில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்'.. பின்னணி என்ன?

COUPLE, TOILET, வீட்டு கழிவறை, ஐ போன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்