‘வெளியே சென்று திரும்பிய தம்பதி!’.. ‘கேரவனை திறந்ததும் அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி!’.. போலீஸ் வந்த பின் காத்திருந்த இரண்டாவது அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்ஸ் சென்று திரும்பிய பிரிட்டன் தம்பதியர் தங்கள் கேரவனை திறந்தபோது சைக்கிளை வைக்கும் இடத்தில் யாரோ மறைந்திருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.

இரண்டு வாரங்கள் பிரான்சில் பொழுதுகளை செலவிட்ட பின்னர் கலாயிஸ் வழியாக பிரிட்டனுக்கு இவர்கள் திரும்பியுள்ளனர். வீடு வந்து சேர்ந்ததும் தங்கள் கேரவனில் சைக்கிள் வைக்கும் இடத்தை பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒருவர் மறைந்து இருப்பதை பார்த்து அதிர்ந்த இருவரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அந்த நபர் சூடான் நாட்டைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் இந்த தம்பதிக்கு எல்லை காவல் படை அதிகாரிகளிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் சூடான் நாட்டின் புகலிடக் கோரிக்கையாளர் பிரான்ஸ் நாட்டுக்குள் வருவதற்கு உதவியதற்காக அந்த தம்பதியருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே தங்கள் கேரவனில் முன்பின் தெரியாத ஒருவர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத இந்த தம்பதியினர், இந்த கடிதத்தை பார்த்து மேலும் அதிர்ந்தனர். ஆனாலும் தங்கள் மீது குற்றம் இல்லை என நிரூபித்தால் இத்தம்பதியர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்