'அடிக்கடி பாத்ரூமில் தேங்கிய தண்ணீர்'... 'கழிவுநீர் செல்லும் துவாரத்தில் பளிச்சென தெரிந்த '2 கண்கள்'... அதிர்ந்துபோன தம்பதி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குளியலறையில் கழிவுநீர் வெளியேறாமல் அடிக்கடி தண்ணீர் தேங்கி வந்ததன் மர்மம் தெரிய வந்தபோது அந்த தம்பதியர் அதிர்ந்து போனார்கள்.

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் கணவன், மனைவி இருவர் வசித்து வந்துள்ளார்கள். அவர்கள் வீட்டிலிருந்த குளியலறையில் கழிவுநீர் வெளியே செல்லாமல் அவ்வப்போது குளியலறையிலேயே தங்கி இருந்துள்ளது. அந்த கழிவுநீர் வெளியேற நீண்ட நேரம் எடுத்துள்ளது. முதலில் சிறிய அடைப்பு ஏதாவது இருக்கும் என நினைத்து அவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்கள்.

ஆனால் இது தொடர்கதையாகவே பிளம்பர் ஒருவரை அழைத்து என்ன பிரச்சனை இருக்கிறது எனப் பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து பிளம்பர் ஒருவர் வந்து குளியலறையைப் பார்த்துள்ளார். ஆனால் அதில் பிரச்சனை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து குளியலறையில் இருந்து கழிவுநீர் வெளியே செல்லும் துவாரத்தைப் பார்த்துள்ளார்.

அப்போது அதில் இரு கண்கள் பளிச்சென தெரிந்துள்ளது. இதனைப் பார்த்து அந்த தம்பதியர் அதிர்ந்து போனார்கள். இதனைத்தொடர்ந்து அந்த துவாரத்தைத் திறந்து பார்த்தபோது அதற்குள் 2 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பாம்பை லாவகமாக வெளியே எடுத்தார்கள். அந்த பாம்பு கழிவுநீர் வெளியேறும் துவாரத்திற்குள் இருந்ததால் தான் அவ்வப்போது கழிவுநீர் வெளியேறாமல் இருந்துள்ளது.

இந்த பாம்பானது சாக்கடை நீர் செல்லும் வடிகால் வழியாக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த தம்பதியர் பாம்பை வெளியில் எடுக்கும் விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஆஸ்திரேலியாவில் பாம்புகள் அதிகம், எனவே ஆஸ்திரேலியாவை விலங்குகளுக்கே கொடுத்து விட்டு நாம் வெளியேறிவிடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்