‘சுற்றுலா வந்த தம்பதி’.. ‘விளையாட்டாய் செய்த காரியம்’.. ‘வினையில் முடிந்ததால் ஏற்பட்ட பரிதாபம்..’
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலிக்கு சுற்றுலா வந்த ஒரு தம்பதி கடற்கரையில் மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்றது பிரச்சனையில் முடிந்துள்ளது.
இத்தாலியிலுள்ள சார்தீனியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த ஒரு தம்பதி அங்கிருந்து திரும்பும்போது நினைவுப் பொருளாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றுள்ளனர். போர்டோ டோரசில் இருந்து படகு வழியாக பிரான்சுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்ட அவர்கள் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் 14 பாட்டில்களில் மணலை நிரப்பி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும், அங்குள்ள அரிய பொருட்களை சேதப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரைகளில் உள்ள மணல், கூழாங்கற்கள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடற்கரை மணலை எடுத்துச் சென்றதற்காக தற்போது பிடிபட்டுள்ள தம்பதிக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை இதற்காக சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் விசாரணையில் அவர்கள் விடுமுறை நினைவுப் பொருளாகவே மணலை எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும், அது விதிமீறல் எனத் தெரியாது எனவும் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- 'திருட்டு பைக்கில் வந்த 'காதல் ஜோடி'யின் பகீர் செயல்'... அதிர்ந்த பெண்... சென்னையில் பரபரப்பு சம்பவம்!
- 'இதுதான் உள்ளங்கையில வச்சு தாங்குறதா'... புதுமண தம்பதியின் 'க்யூட் ரொமான்ஸ்'... வைரலாகும் வீடியோ !
- ஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- 'பாக்ஸிங்' தந்தையால்.. '7 வயது மகளுக்கு'.. நேர்ந்த 'கொடூரம்'.. அதன்பின் கோர்ட் வாசலில் அரங்கேறிய சம்பவம்!
- 'கழுத்தில் கயிறு.. தொண்டையில்'.. '.. உதற வைக்கும், 2 தம்பதியருக்கு நேர்ந்த இரட்டைப் படுகொலை!
- 'இதெல்லாம் மெட்ரோவில் பண்ற காரியமா?'.. 'இப்ப என்ன ஆச்சு?'.. இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!
- தேனிலவு பயணத்தில் ‘எரிமலை பள்ளத்துக்குள் விழுந்த கணவன்..’ மனைவி செய்த காரியம்..
- 'உன்ன பாக்க 2,400 கி.மீ தாண்டி வந்தா'... 'காதலியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காதலன்'!
- 'ஆசையா ஊருக்கு வந்தா'... 'காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்'... பதற வைக்கும் வீடியோ!