"குற்றவாளி பத்தி துப்பு குடுத்தா 280 கோடியா?".. தம்பதி கொலை வழக்கில் 5 வருசமா நீடிக்கும் மர்மம்!!..
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் வாழ்ந்து வந்த தம்பதியர் பேரி ஷெர்மன் (Barry Sherman) (வயது 75) மற்றும் ஹனி (Honey) (வயது 70) ஆகியோர். இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி நாற்காலியில் கட்டி போடப்பட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பேரி ஷெர்மன் மற்றும் அவரது மனைவி ஹனி ஆகியோரின் மரணம் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
கனடாவின் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த தம்பதியர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அந்த சமயத்தில் அப்பகுதி முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அவர்களின் இறுதி அஞ்சலிக்கு ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து, பேரி ஷெர்மன் - ஹனி தம்பதியர் மர்மமான முறையில் இறந்து போனது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்திருந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் பேரி மற்றும் ஹனி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், அவர்கள் இருவரும் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் இதற்கான காரணம் யார் என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்ற விஷயம் மர்மமாகவும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான், பேரி ஷெர்மன் - ஹனி தம்பதியரின் மகன் மற்றும் குடும்பத்தினர், அவர்களின் ஐந்து ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு சமீபத்தில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்திற்கு காரணம் யார் என்பது குறித்து துப்பு கொடுத்தால் 35 மில்லயன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 280 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என்றும் பேரி ஷெர்மனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளாக குற்றவாளி பற்றி எந்தவித துப்பும் கிடைக்காமல் இருக்கும் சூழலில், பேரி மற்றும் ஹனி ஆகியோரின் மரணத்தால் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் மீளாத் துயரில் இருந்து வருகின்றனர். மேலும் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க தனியாக துப்பறியும் அதிகாரிகளை நியமித்து அவர்கள் விசாரித்தும் வருகின்றனர். பேரி மற்றும் ஹனி ஆகியோர் இறப்பதற்கு முன்பாக அப்பகுதியில் உலாவிய நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் உள்ளன. ஆனால், அவர் யார் என்பதை இன்னும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Alberta : பெற்ற மகளென்று தெரியாமல் மருத்துவம் பார்த்த தாய்.. வீட்டுக்கு வந்த பின்பு வந்து சேர்ந்த துயர செய்தி!
- உருவகேலிக்கு எதிரான கலகக்குரல்.. கனேடிய இந்திய வம்சாவளி டிக்டாக் பிரபலம் 21 வயதில் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- 39 ஆண்டுகளுக்கு முன்.. 4 மாத இடைவெளியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்.. இத்தனை நாள் கழிச்சு வழக்கில் நடந்த ட்விஸ்ட்!!
- "இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit
- மெட்டாவில் வேலை.. ஆசை ஆசையாய் கனடாவுக்கு பறந்த இந்தியர்.. சேர்ந்து 2 நாள்ல காத்திருந்த அதிர்ச்சி.. இளைஞரின் உருக்கமான போஸ்ட்..!
- காபி குடிச்சுட்டு இருந்தப்போ வந்த மெயில்.. "ஓப்பன் பண்ண மனுஷன் வாழ்க்கை அடுத்த நிமிஷமே மாறிடுச்சு"..
- "12 வருஷம் ஆகியும் புடிக்க முடியல".. திக்கித் திணறும் போலீஸ்.. "துப்பு குடுத்தா 50,000 டாலராம்".. தீவிரமாக இறங்கிய அதிகாரிகள்
- 42 வருசத்துக்கு முன்னாடி காணாம போன பெண்.. இத்தனை நாளா தேடிட்டு இருந்த குடும்பம்.. "கடைசி'ல இப்ப ஒரு உண்மை தெரிய வந்துருக்கு.."
- "சாக்லேட் சாப்டா போதும்.. 61 லட்சம் சம்பளம்.. வீட்ல இருந்துகூட வேலை பார்க்கலாம்".. நிறுவனம் வெளியிட்ட வித்தியாசமான அறிவிப்பு.. முழு விபரம்.!
- பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்ற 'பெண்'.. வெளிய வர்றப்போ லட்சாதிபதி.! தாறுமாறாக அடித்த 'அதிர்ஷ்டம்'!!