"என்னய்யா Flight'ல இப்டி டிக்கட் புக் பண்ணி வெச்சு இருக்கீங்க.." ஊருக்கு போக முடியாம அவதிப்பட்ட தம்பதி.. பரபரப்பு காரணம்
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியர், விமானத்தில் டிக்கெட் புக் செய்யவே, அது தொடர்பாக நடந்த குளறுபடி, கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீபானி மற்றும் ஆண்ட்ரூ பிரஹாம் என்ற தம்பதிக்கு, 13 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்த தம்பதி தங்களின் குழந்தையுடன் ஐரோப்பாவிற்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர். அங்கே விடுமுறையை சிறப்பாக கழித்து விட்டு, மீண்டும் தங்களின் சொந்த நாடான ஆஸ்திரேலியா திரும்ப அவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.
இதற்காக, விமான பயணத்திற்கான டிக்கெட்டையும் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் அவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அவர்கள் பயணம் செய்ய இருந்த விமானம், நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தொடர்பு கொண்டு கூறியுள்ளது. அப்போது தான், அவர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
அதாவது ஸ்டெபானி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் ஒரு விமானத்திலும், அவர்களின் 13 மாத பெண் குழந்தைக்கு வேறு ஒரு விமானத்திலும் இருக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்ததும் அந்த தம்பதி ஆடிப் போயினர். இது தொடர்பாக, தாங்கள் விமான டிக்கெட் புக் செய்த நிறுவனத்திற்கு அழைத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் தங்கள் மீது தவறு ஏதும் இல்லாத வகையில் மழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஸ்டெபானி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர், ஒரே விமானத்தில் மூன்று பேரும் பயணிப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக, சுமார் 24 மணி நேரத்தில், 55 தனித்தனி தொலைபேசி அழைப்புகள் மூலமாக, சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் பேசி, அந்த தம்பதி இறுதியாக பிரச்சனையை சரி செய்துள்ளனர்.
இருந்தாலும், தங்களின் குழந்தையுடன் ஸ்டெபானி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் ஒரே விமானத்தில் பயணிக்க, சுமார் 12 நாட்களுக்கு பிறகு தான் டிக்கெட் கிடைத்துள்ளது. இதனால், விடுமுறை நாட்கள் தாண்டியும் அதே ரோம் நகரில் தங்க வேண்டியுள்ள சூழ்நிலையும் அந்த தம்பதியருக்கு உருவாகியுள்ளது. இரண்டு வாரங்கள், அவர்கள் தங்குவதற்கான செலவும் அதிகமானது.
முதலில், தங்களின் தவறை மறுத்த விமான நிறுவனம், பின்னர் ஸ்டெபானி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிர்வாகத்தின் கோளாறால் இந்த தவறு நடந்து விட்டதாகவும், ஸ்டெபானி - ஆண்ட்ரூ தம்பதி கூடுதலாக தங்க செலவு செய்த பணத்தினை திருப்பி செலுத்த முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால், அந்த தம்பதியினரும் சற்று மனநிம்மதி அடைந்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்த தருணத்துக்காக பல வருஷம் காத்திருந்தேன்".. அம்மா, அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- "அமெரிக்கா To சென்னை.." 26 மணி நேர பயணம்.. மூதாட்டிக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் பறந்த தனி விமானம்.. பின்னணி என்ன??
- நடு வானில் உடைந்த விமானத்தின் windshield.. கட்டுப்பாட்டு அறைக்கு பறந்த தகவல்.. கடைசி நேரத்துல விமானி எடுத்த துணிச்சலான முடிவு..!
- "என்ன Road'அ பாத்து போயிட்டு இருக்கு?.." நடுவானில் நடந்த பரபரப்பு.. பதைபதைப்பை ஏற்படுத்திய 'த்ரில்' வீடியோ!!
- விமானத்தில்.. அடுத்தடுத்து மயங்கிய பயணிகள்.. நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன??
- 126 பயணிகளுடன் விமானம் தரையிங்கும்போது கேட்ட பயங்கர சத்தம்..கொஞ்ச நேரத்துல பரவிய தீ.. பரபரப்பான ஏர்போர்ட்..!
- விமான எஞ்சினில் பற்றிய தீ.. சாமர்த்தியமாக செயல்பட்டு 185 பயணிகளையும் காப்பாற்றிய பெண் விமானி.. யாருப்பா இவங்க?
- டேக்-ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துல எஞ்சினில் சிக்கிய பறவை.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. ஒரே நாள்-ல 3 டைம் இப்படி ஆகிடுச்சு..!
- நேருக்கு நேர் மோத இருந்த இரண்டு விமானங்கள்.. கடைசி நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிக்கு குவியும் பாராட்டுகள்..!
- 10 நிமிஷம் எந்த பதிலும் வரல.. ‘அய்யோ ஃப்ளைட்டை யாரோ கடத்திட்டாங்க’.. பதறிப்போன அதிகாரிகள்.. கடைசியில் தெரியவந்த உண்மை..!