"நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே..." "இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்..." 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தொற்றுநோய் பரவல் கணித பகுப்பாய் வில் வல்லுனராக திகழக்கூடிய ஆடம் குச்சார்ஸ்கி என்பவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியராக இவர் பணியாற்றி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் பற்றிய அவரது பார்வையும், கருத்துகளும் உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த எப்படி கடைசி கொசுவையும் கொன்றுவிட வேண்டும் என்ற தேவையில்லையோ, அதே போலத்தான் கொரோனா வைரஸ் பரவலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலே தானாக குறைந்து விடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களுக்கு பரப்பாமல் குணமடைய சாத்தியமான சூழலை ஏற்படுத்துவதே, வேகமான பரவைலைக் கட்டுப்படுத்துவதற்குரிய மிகச் சிறந்த வழி எனக் கூறியுள்ளார்.
தொற்றுநோய் பரவல் கணிதத்தை பொறுத்தமட்டில், ஸ்பானிஷ் புளூ, சார்ஸ் அல்லது எபோலா போன்ற வைரசில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்றால் அது தொற்றின் ஆரம்பத்திலேயே, அதாவது அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் தென்படுகிறபோதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என்பதுதான்.
சமீபத்தில் நாங்கள் நடத்திய சில தோராய மதிப்பீடுகளை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பாதித்துள்ள பல நாடுகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வெளி உலகுக்கு சொல்லப்படுகிறது என்று நினைக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் பரவுவதற்கும், இது போன்ற போலியான தகவல்கள் பரவுவதற்கும் ஒற்றுமை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னையில் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்?’ வெளியானது பட்டியல்!
- ‘எப்போ கொறையும்? எப்போ முடியும்?!’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’!
- மறுபடியும் 'மொதல்ல' இருந்தா?... 'கொரோனா' வெற்றியை... நாய்,பூனை, வவ்வால்கள் 'விற்பனையுடன்' கொண்டாடும் சீனர்கள்!
- போலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு!.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’!
- ‘ஹவுஸ் ஓனர்ஸ் தொல்லை பண்ணக்கூடாது!’.. ‘இவங்களுக்கெல்லாம் அரசே வாடகை குடுக்கும்!’ - அதிரடியாக அறிவித்த டெல்லி முதல்வர்!
- கொரோனாவால் 'வேப்பிலைக்கு' ஏற்பட்ட திடீர் கிராக்கி... ஒரு 'கட்டு' எவ்ளோன்னு பாருங்க!
- ‘10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா!’... தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு!
- 'நாங்க உயிரோட இருக்கும் போதே... இப்படியெல்லாம் பேசாதீங்க!'... வதந்திகளால் மனமுடைந்த கொரோனா நோயாளியின்... மனதை உருக்கும் கோரிக்கை!
- 'ஊரடங்கு உத்தரவால்... 200 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி!'... வரும் வழியில் நிகழ்ந்த கோரம்... போலீஸார் உருக்கம்!
- சீனாவில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா படையெடுத்து வந்தது எப்படி!?... கொரோனா தொற்றின் பாதை விளக்கம்!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!