'சீனாவை தனிமைப்படுத்த' தயாராகும் 'நாடுகள்'... 'பிள்ளையார் சுழி' போட்டது 'ஜப்பான்...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்'...
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என முடிவெடித்துள்ள ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், சீனாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டுள்ளன.
கொரோனா பிரச்னையால் உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டி இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால் அந்த நிறுவனங்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சீனா செய்த வேலைக்கு பதிலடி தர வேண்டும் என்று ஒரு சில நாடுகளிடையே கருத்து நிலவுகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாடுகள் நினைக்கின்றன. இனிமேல் சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்று அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்த வரிசையில் அமெரிக்காவும், ஜப்பானும் முன்னிலையில் உள்ளது. சீனாவை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஜப்பான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு நிவாரண நிதி தருவதற்காக, சுமார் 2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம் ஆகும். இதிலிருந்து உலகுக்கு ஜப்பான் தெரிவிக்கும் செய்தி சீனாவை விட்டு வெளியேறுங்கள் என்பது மட்டுமே.
சீனாவில் உற்பத்தி குறைந்தால் அதனால் பலனடையும் முக்கிய நாடு இந்தியா. ஏனென்றால் இந்தியாவில் உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் மனித சக்தி ஏராளமாக கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பெருகும். அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என்பதால் உலக நாடுகளின் பார்வை அடுத்ததாக இந்த நாடுகளைத்தான் குறி வைக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்!... காரணம் அறிந்து அதிர்ந்து போன காவல்துறை!
- 'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...
- 'இதுக்கு ஒரு எண்டு கிடையாதா'?...'புதிய பீதியை கிளப்பும் சீன ஆய்வாளர்கள்'...அதிரவைக்கும் ஆய்வு!
- 'இப்படி எல்லாம் செஞ்சா... கண்டிப்பா கொரோனாவ நாம ஜெயிச்சிடலாம்!'... தென் கொரியா மாடலை கையிலெடுத்த நகராட்சி!
- 'தொடர்ந்து நடக்கும் மரணம்'...'ஆனா இத்தாலி நிம்மதி அடைய ஒரு காரணம் இருக்கு'... வெளியான தகவல்!
- 'கேரளாவில் குணமான வெளிநாட்டினர்'...ஏன் 'எச்.ஐ.வி' மருந்து கொடுக்கப்பட்டது?... பின்னணி தகவல்கள்!
- 'பிரியாணி சாப்பிட அனுமதி மறுத்ததால்... மருத்துவமனையை சேதப்படுத்திய கொரோனா நோயாளி!'... கோவையில் பரபரப்பு!
- 'ஒருவரால் வந்த வினை!'... 'ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா!'... மாவட்டத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
- சென்னை ‘டிஎம்எஸ்’ வளாகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ‘கொரோனா’ தொற்று.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!
- ‘ஒரே நாள்ல இவ்ளோ பேர் பலியா..!’.. ஆடிப்போன ‘அமெரிக்கா’.. கதிகலங்க வைக்கும் கொரோனா..!