'இது விளையாட்டு காரியம் இல்ல'... 'பெரிய விலை கொடுக்க போறீங்க'... உலக சுகாதார நிறுவனம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து இன்னும் பல நாடுகள் முழுமையாக மீளாத நிலையில், 3ம் அலை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல நாடுகளில் கடைகள், உணவகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதோடு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் தொடர்பான விதிகளை எளிதாக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால திட்டத்தின் தலைவர் மைக் ரியான், “இதேபோக்கு தொடர்ந்தால், கொரோனா வைரஸின் புதிய அலை வெகு தொலைவில் இருக்காது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரவில்லை” என்று எச்சரித்திருக்கிறார்.
இதற்கிடையே புதிய டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியது என்றும் நம்பப்படுகிறது. டெல்டா மாறுபாடு இப்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பதிவாகியுள்ளது. எனவே உலக நாடுகள் பலவும் அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டி இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இன்னும் கொரோனா பரவல் முடியல’!.. இந்த விஷயத்துல ரொம்ப ‘கவனம்’ தேவை.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
- இப்படி பண்றது 'அவங்களுக்கு' தான் பயங்கர ரிஸ்க்...! 'பெரிய ஆபத்துல போய் முடியும்...' - 'கடும் எச்சரிக்கை' விடுத்த உலக சுகாதார நிறுவன இயக்குனர்...!
- ‘நாட்டோட பெயரை சொல்லக்கூடாது’!.. உருமாறிய கொரோனாவுக்கு ‘புதிய’ பெயர்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!
- கொரோனாவ 'கண்ட்ரோல்' பண்ற மருந்துகளில 'அந்த மருந்த' மட்டும் நீக்குறோம்...! - 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு...!
- 'எங்க தடுப்பூசி ரொம்ப பாதுகாப்பானது'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சீனா'... உலக சுகாதார நிறுவனம் முக்கிய முடிவு !
- இந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவுனதுக்கு இதுதான் காரணம்.. உலக சுகாதார நிறுவனம் கடுமையாக சாடல்..!
- 'இந்தியாவுல பரவிட்டு இருக்க கொரோனாவ...' நாங்க 'அந்த லிஸ்ட்'ல வச்சுருக்கோம்...! - உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு...!
- 'தாறுமாறா பரவிட்டு இருக்கனால...' கொரோனா வைரஸ் 'இந்த மாதிரி' ஆகுறதுக்கும் சான்ஸ் இருக்கு...! - உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி வெளியிட்ட தகவல்...!
- 'முன்னாடி மாதிரியும் பரவுது...' அதே நேரத்துல 'இப்படியும்' கொரோனா வைரஸ் பரவுறதா கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க...! - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்...!
- 'எங்கள் இதயமே நொறுங்கி போனது'... 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு'?... உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி!