'ஆரம்பத்துல சொன்னதுக்காக புடிச்சு ஜெயில்ல போட்ருக்காங்க...' 'கொரோனாவ' முதல்ல கணிச்சவரே இவரு தான்...., இப்போ அவரோட நிலைமை என்ன தெரியுமா ...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவைரஸ் பற்றி முதலில் செய்தி வெளியிட்ட சீன மருத்துவர் லீ வென்லியாங் (Li wenliang), அதே கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சீன மக்களை மேலும் துயரத்தையும், அச்சத்தையும் தந்துள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் காற்றின் மூலம் எளிதாக மனிதர்களுக்கு பரவி  சீனா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே கதி கலங்க வைத்து வருகிறது. இது வரை கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்ட மக்களின் இறப்பு விகிதம் சுமார் 630 மேல் இருக்கலாம் என கணிக்கப்பட்டுகிறது.

கொரோனா வைரஸ் பற்றி முதன்முதலாக  மக்களுக்கும், அரசுக்கும் தகவல் அளித்த சீன மருத்துவர் லீ வென்லியாங் (Li wenliang), கொரோனா வைரஸால்  தாக்கப்பட்டு உயிரிழந்ததாக ஹூவான் மருத்துவமனை அறிவித்துள்ளது. புதிய வகை நிமோனியா போன்ற வைரஸ் பரவி வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன் முதல் எச்சரித்ததற்காக இந்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட செய்திகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டன.

மருத்துவர் லீ வென்லியாங் (Li wenliang) இறந்து விட்டதாக குறிப்பிட்டு பின் மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் டைம்ஸ் என்ற சீன அரசின் பத்திரிகையில் மாற்றி மாற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதய துடிப்பு குறைந்து வருவதாகவும் முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் வெளியாயின.

அரசை கண்டித்து சீன மக்கள் மருத்துவரின் உயிரிழப்பை பற்றி தெரிவிக்குமாறு சமூக ஊடகங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தனர். கடும் கண்டனங்களை உணர்ந்த சீன அரசு உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.58 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் லீ இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சுமார் 100 மில்லியன் டாலர் நிதி உதவியை கொரோனா வைரஸிற்கு மாற்று மருந்து தயாரிக்கவும், அதன் பாதிப்பை போக்குவதற்காகவும்  பில்கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மருந்தே இல்லாத இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்த நிதி உதவும் என்று அந்த அறக்கட்டளை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

remdesivir மற்றும் chloroquine ஆகிய இரு மருந்துகளும் பரிசோதனையில் நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாக சீனா வூகான் இன்ஸ்டிட்யூட் ஆப் விரோலாஜி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளுக்கு சீனாவின் பரிசோதனைக் கூடம் உரிமை கோரியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

CORONOVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்