Video: 2 நாட்களில் '1420 பேர்' பலி... இரவு-பகலாக இயங்கும் 'இடுகாடுகள்'... உலகின் 'சொகுசு' நாடுகளில் ஒன்றான... 'இத்தாலி' தவறியது எங்கே?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் மக்களை வெகுவாக அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக இறந்த உலக மக்களில் 38.3% இத்தாலி நாட்டினவராக இருக்கிறார்கள். இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நேற்று ஒரேநாளில் 6,557 உயர்ந்து தற்போது 53 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது. உலகின் சொகுசு நாடுகளில் ஒன்றான இத்தாலியில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அவசர காலங்களில் இலவச சிகிச்சை என்பது ஐரோப்பாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் திட்டம்.  ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாட்டு குடிமகன்களுக்கும் இது பொருந்தும்.

மக்கள் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு சுகாதாரத்துறையால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது தான் சோகம்.பெரும்பாலான முதியவர்கள் தங்களது ரிட்டையர்மென்ட் காலத்துக்காகத் தேர்ந்தெடுக்கும் நாடு என்று தான் இத்தாலியைக் குறிப்பிடுவார்கள். உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் லம்போர்கினி, பெராரி, பியட், குஸ்ஸி உள்ளிட்ட பல சொகுசு வாகனங்கள் இத்தாலியில்தான் உற்பத்தியாகின்றன. பொருளாதாரம், மருத்துவ வசதி இரண்டும் இருந்தும் கொரோனாவை இத்தாலியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக இத்தாலியில் தங்கி படிக்கும் சீன மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போய்விட்டு மீண்டும் திரும்பியபோது அவர்களை சோதனை எதுவும் செய்யாமல் நாட்டில் அனுமதித்ததும் அதில் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மற்றொரு காரணமாக சமூகம் சார்ந்து இயங்கும் இத்தாலி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னரும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. இதனால் தான் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் இந்திய அரசு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துரிதகதியில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் ஒரு ஜோக் அல்ல சீரியஸான விஷயம் என்பதை இத்தாலியைப் பார்த்தாவது மற்ற நாடுகள் கற்றுக் கொள்ளுங்கள் என இறந்த சடலங்களை ராணுவம் கொண்டு அப்புறப்படுத்தும் வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதனால் கொரோனாவை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்லாமல் சுய கட்டுப்பாட்டுடன் இருந்து சக மக்களைக் காக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி கொள்வது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்