சத்தமில்லாமல் 'பிரிட்டனுக்குள்' நுழைந்த 'கொரோனா'... 'அச்சத்தில்' பிரிட்டன் மக்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவிலிருந்து பிரிட்டனுக்கு வைரஸ் தாக்குதலுடன் வந்த ஒருவர் மூலம் பிரிட்டனில் வைரஸ் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பிரிட்டன் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், பிரிட்டனில் உள்ள 2 மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்த மருத்துவர்கள் உறுதி செய்த போது, அந்த இரு மருத்துவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது.

இந்நிலையில் இவர்கள் மூவரையும் தனிமைப்படுத்தி, சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அந்த நபரை சந்தித்து சிகிச்சை அளித்த பின் 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளனர்.

தற்போது அந்த '15 நோயாளிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்' என, பிரிட்டன் சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர். அந்த, 15 பேரால் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சம் எழுந்துள்ளது. இதனால், 15 பேரைக் கண்டறியும் தீவிர முயற்சியில், பிரிட்டன் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது பிரிட்டனில் வைரஸ் தொற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

BRITAIN, CORONA, DOCTORS, SPREAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்