'ஏசி' காற்று வழியாக ஹோட்டலில் பரவிய கொரோனா...! எப்படி அந்த '3' டேபிளுக்கு மட்டும் கொரோனா வந்துச்சு...? ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் ஹோட்டலில் சாப்பிட சென்ற 3 குடும்பங்களுக்கு அங்குள்ள ஏ.சி காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவிய சம்பவம் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் குவாங்சு மாகாணத்தில் இயங்கும் ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்ற 3 குடும்பங்களை சார்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே ஓட்டலில் சாப்பிட்ட 80 பேருக்கு கொரோனா வரவில்லை இதனால் குழப்பத்தில் உறைந்த சீனா இது குறித்து ஆய்வு நடத்தியது. இதுகுறித்து சீன நோய் தடுப்பு மைய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த குடும்பம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி வூஹானில் இருந்து குவாங்சு வந்தடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தாக்கிய நபர் ஜனவரி 24 ஆம் தேதியன்று குவாங்சு பகுதியில் இயங்கும் ஓட்டல் ஒன்றில் உணவருந்த வந்துள்ளனர். அதே சமயம் அங்கு மற்ற 3 குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டலில் இருந்துள்ளனர்.
3 குடும்பங்களும் வெவ்வேறு டேபிளில் இருந்த போதும், கொரோனா நோயாளி அமர்ந்திருந்த இடம் ஏ.சி. காற்று வீசும் பகுதிக்குள் இருந்ததால் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் கொரோனா பரவல் குறித்து புதிய தெளிவு கிடைக்கிறது.
இதில் கொரோனா பாதித்த நபர் மூலம் வெளிவந்த வைரஸ் கலந்த நீர்த்துளிகள் ஏர் கண்டிஷனிங் எல்லைக்குள் கொண்டு சென்றுள்ளது. பிறகு ஏர் கண்டிஷனிங்லிருந்து மூலம் வெளிவந்த நீர்த்துளிகள் அருகில் இருக்கும் மற்ற டேபிளில் இருந்தவர்களால் சுவாசிக்கப்பட்டு வைரஸ் பரவியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தான் அருகில் இருந்த இரண்டு டேபிள்களில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த வைரஸ் தொற்று கலந்த காற்றானது ஓட்டலின் மற்ற தளங்களில் தொற்று தூசுப்படலத்தின் மூலம் பரவவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அப்படி தூசுப்படலத்தின் மூலம் தொற்று பரவியிருந்தால், அது நீண்ட நேரம் காற்றில் நீடிக்கும் என்பதோடு, எளிதில் சிதறும் என்பதால் அதனை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்திருக்கும் என வளர்ந்து வரும் தொற்று நோய்கள் என்ற ஜர்னலில் வெளியான ஆய்வு கட்டுரையில் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சீனாவில்' விசாரணை... 'வுஹானுக்குள்' நுழைய 'அனுமதி' இல்லை... 'முற்றும்' மோதலால் 'பரபரப்பு'...
- ‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
- சீனா '130 பில்லியன்' 'யூரோ' இழப்பீடு வழங்கவேண்டும்... 'நோட்டீஸ்' அனுப்பியது 'ஜெர்மனி...' 'சீனா அளித்த கூல் பதில்...'
- "வைரஸ் தானா பரவுச்சா?..." "இல்ல பரப்புனாங்களா?..." 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'
- ‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’!
- 'இந்திய கம்பெனிகளை வாங்க ப்ளான் போட்ட சீனா...' 'இந்த நேரம் தான் சரியான சான்ஸ் என...' சீனாவின் மாஸ்டர் ப்ளான்களை தவிடு பொடியாக்கிய இந்தியா...!
- 'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை?... வெளியாகியுள்ள 'பட்டியல்'...
- மற்ற நாடுகளும் 'இதை' செய்ய வேண்டி வரும்... சீனாவின் 'தவறு' குறித்து... உலக சுகாதார அமைப்பு 'கருத்து'...
- 'நீங்க சொல்ற அந்த வௌவால் வூஹான்-லயே இல்ல!'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. பின் வைரஸ் பரவியது எப்படி?
- வாடிக்கையாளரின் 'நலனே' முக்கியம்... 'சீன' நிறுவனங்களின் 'உத்தியை' கையிலெடுத்த 'டெலிவரி' நிறுவனம்...