WATCH VIDEO: ‘கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும்’... ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியால்’... ‘மருத்துவர் வெளியிட்ட வீடியோ’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளியின் நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை வெர்ச்சுவல் ரியால்ட்டி மூலம் வீடியோவாக மருத்துவர் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம்படித்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. சீனாவை விட, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வடுவை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸின் பாதிப்பை மக்கள் உணர வேண்டுமென்பதற்காக வாஷிங்டன் டி.சி மருத்துவமனை வைரஸ் தொற்றால் பாதித்தவரின் நுரையீரல் பாதிப்பை 3டி வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தலைமை இருதய அறுவை சிகிச்சைப் பிரிவின் மருத்துவரான கீத் மோர்ட்மேன் விளக்கமாக இதுகுறித்து எடுத்துரைக்கிறார். அதில், “இருமல், காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 59 வயது முதியவருக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. ஆனாலும் அப்போதும் அவர் மூச்சுவிட சிரமப்பட மேலும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அப்போது முதியவரின் நுரையீரல் பகுதியை மேலும் தெரிந்துகொள்ள வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜி மூலம் கண்டறிய, சில இடங்களில் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.

அந்த மஞ்சள் நிறம் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, வீக்கமடைந்து காணப்படுகின்றன. ஆக்ரோஷமாக தாக்கப்படும் கொரோனாவால் முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் மூச்சுவிட சிரமப்படுகின்றனர். ஆனால், ஆரோக்கியமான நுரையீரல் கொண்ட நோயாளி ஒருவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தால் மஞ்சள் நிறம் இல்லை.

கொரோனா வைரஸ் பரவும் போது நுரையீரல், கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்கான நிலை ஏற்படுகிறது’ என்கிறார் மோர்ட்மேன். கொரேனா வைரஸால் நுரையீரல் இதுப்போன்று பாதிக்கப்பட்டால் மீண்டும் குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம் என்பதால், மிகவும் கவனமுடன் மக்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்