‘நிச்சயமா இது அங்கிருந்து பரவல’... ‘ஆனாலும், எப்படி வந்துச்சுனு’... 'உலக சுகாதார நிறுவனம் விளக்கம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகளவில் 24,99,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.70 லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு சீனாவின் வூஹான் ஆய்வகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவவில்லை என்றும், கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, விலங்குகளிடம் இருந்து தான் பரவியுள்ளது என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பெடலா சாயிப் விளக்கமளித்துள்ளார். விலங்குகளில் இருந்து தான் இந்த வைரஸ் உருவாகி உள்ளதாகவும், வூஹான் ஆய்வகத்தில் இந்த வைரஸ் கையாளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு எவ்வாறு இந்த கொரோனா வைரஸ் பரவியது என்பதுதான் தெளிவாக இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ளார். வௌவால்களிடமிருந்து கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து குழம்பியுள்ள நிலையில், அது தொடர்பாக இன்னும் கண்டுப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்