அமெரிக்க 'வரலாற்றில்' முதல்முறையாக... '50 மாகாணங்களும்'... அதிபர் 'டிரம்ப்' வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள அமெரிக்கா உயிரிழப்பிலும் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 5 நாட்களுக்கு முன்பாக 10 ஆயிரமாக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணம் முதல்முதலாக பேரழிவு மாகாணமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு மாகாணங்களாக பேரழிவு மாகாணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வந்தன. கடைசியாக வியோங் மாகாணத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரழிவு மாகாணமாக அறிவித்ததையடுத்து, அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அனைத்து 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இயற்கைப் பேரழிவுகள், பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றின்போது ஒரு சில மாகாணங்கள் பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுதான் முதல்முறையாக 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசியுள்ள அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், "அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாகாணங்களும் அதிபரின் பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான போரில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். விரைவில் முழுவதுமாக வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்லயே பாதுகாப்பா இருங்க'... 'பிரதமர்' வெளியிட்ட 'வீடியோவால்'... 'கோபத்தில்' மக்கள்!...
- கொரோனாவை பரப்ப சதி திட்டம்!?... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு!... பதறியடித்து ஓடிய போலீஸார்!... என்ன நடந்தது?
- கொரோனா எதிரொலி... பழைய மிக்சி, கிரைண்டருக்கு பதிலாக புதிது!... ஊரடங்கில் வித்தியாசமான உதவி!
- உலகமே 'எதிர்பார்த்து' காத்திருக்கும் கொரோனா 'தடுப்பூசி'... 'எந்த' மாதத்திற்குள் தயாராகும்?... 'ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானி 'தகவல்'...
- 'ஊரடங்கு' உத்தரவை நீட்டித்து 'தமிழக முதல்வர்' உத்தரவு ... எதற்கெல்லாம் அனுமதி?... விரிவான 'விளக்கம்' உள்ளே!
- ‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’!
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?.. வெளியான தகவல்..!
- 'கொரோனாவின் பிடியில் மீண்டும் சீனா!'... புதிதாக 108 பாதிப்பு... என்ன காரணம்?
- “அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால்..”- வைரமுத்து ட்வீட்.. “உதவி செய்றத தடுக்கும் நோக்கம் இல்லை”- தமிழக அரசு மறுவிளக்கம்!
- ‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’!