அமெரிக்கா, இத்தாலியை தொடர்ந்து இந்த நாட்டை குறிவைக்கும் ‘கொடூர கொரோனா’.. ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 938 பேர் இங்கிலாந்து நாட்டில் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு பாதுக்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா வைரஸால் இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து நாட்டில் 60,733 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 938 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7097 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தயார் நிலையில் 200 விமானங்கள், 100 ரயில்கள்’.. ‘இயல்புநிலைக்கு திரும்பும் சீனாவின் வுகான் நகரம்’.. ஆனால் சில கட்டுபாடுகள்..!
- இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக பலியான மருத்துவர்.. நாட்டையே கலங்க வைத்த சம்பவம்!
- 'வெளிநாட்டுல இருக்கறவங்க என்ன பண்ணுவாங்க!?'...'அதுக்காக தான் 'இத' செய்றோம்!'... கேரள முதல்வர் பினராயி விஜயன் அடுத்த அதிரடி!
- “இந்தியாவுக்கு மட்டுமில்ல.. மனித குலத்துக்கே உதவும் வலுவான தலைமை”... நன்றிப்பெருக்குடன் ட்வீட் போட்ட ட்ரம்ப்!
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கிட்டா நல்லது'...ஆனா இவங்க கண்டிப்பா சாப்பிட கூடாது!
- ‘அவங்க கொரோனாவையும் சேத்து கொண்டு வருவாங்க!’.. பெண் மருத்துவர்களுக்கு குடியிருப்புவாசிகளால் நேர்ந்த கொடுமை!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..!' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'
- '24 மணி நேரத்தில் சட்டெனெ கூடிய கவுண்ட்'... 'இந்தியாவில் 5734 பேர் பாதிப்பு'... இது தான் காரணமா?
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்?...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'