வெறும் 38 நாட்களில் '30 ஆயிரம்' பேர் உயிரிழப்பு... 'அதிர்ச்சியில்' உறைந்து போன நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

38 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போனதால், அமெரிக்கா நாடு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது.

உலகளவில் கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்கள் கொத்துக்கொத்தாக கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

முதன்முதலில் தோன்றிய சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் தான் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணும் அளவுக்கு அமெரிக்காவில் தற்போது பேயாட்டம் ஆடிவருகிறது. தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 2000-க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு அமெரிக்கா முழுவதும் சுமார் 30,400 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி முதன்முறையாக கொரோனாவுக்கு அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தார். அப்போது சாதாரணமாக கருதப்பட்ட தற்போது வெறும் 38 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பலிவாங்கி உலக நாடுகளை உறைய வைத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்திலும்(30,400), இத்தாலி (21,645) 2-வது இடத்திலும், ஸ்பெயின் ( 18,500) 3-வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து அதிக உயிரிழப்புகளை சந்தித்து வந்த இத்தாலியில் தற்போது கொரோனா பரவும் விதம் கட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்