WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்நெரிசல் மிகுந்த நியூயார்க் நகரில் கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, இந்தியர்கள் இடைவிடாமல் உணவினை அளித்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்து வருகிறது.
இத்தாலி, ஸ்பெயினை அடுத்து அமெரிக்கா கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு 1,032 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 68,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், நியூயார்க் நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 33,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் சீனாவைத் தவிர உலகமே லாக் டவுனில் இருக்கும் நிலையில், அந்த துன்பத்தால் நியூயார்க் நகர மக்களும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால், போதிய உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.
இதையடுத்து மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து கொண்ட அந்நகர மேயர் பில் டி பேசியோ அங்கிருக்கும் குருத்வாராவை அணுகியுள்ளார். மக்களின் தேவையை உணர்ந்த குருத்வாரா தினமும், 30,000 நபர்களுக்கான உணவை திங்கள்கிழமை முதல் தயாரித்து வருகிறது. சத்தான காய்கறிகள், பருப்புகள், சாதம் உள்ளிட்ட வெஜிடபிள் உணவுகள் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்று நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அமெரிக்க குருத்வாரா கமிட்டியைச் சேர்ந்த ஹிமத் சிங் கூறுகையில், ``உணவுகளை பாதுகாப்பான முறையில் தயாரித்து, எங்களது தன்னார்வலர்கள் விநியோகித்து வருகின்றோம். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள், முதியவர்களை அடையாளம் கண்டு உணவுப் பார்சல்களை வழங்கி வருகிறோம். அதேபோல், கொரோனா பாதித்து அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கும் உணவு வழங்குகிறோம்.
இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் இந்தப் பணியைச் செய்கிறோம். நியூயார்க்கில் மட்டுமல்லாமல், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களிலும் குருத்வாரா லாந்தர்களில் இடைவிடாமல் அடுப்புகள் எரிந்துகொண்டிருக்கின்றன. குருத்வாராவில் உள்ள உணவு இருப்புகள் கையிலிருக்கும் வரை இந்தச் சேவையை மேற்கொள்வோம். ஏற்கெனவே நன்கொடைகள் வழியாக உணவுப் பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைத்துள்ளோம்'' என்றார்.
அமெரிக்கா மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிலும் “யுனைட்டட் சீக்ஸ்” என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஒரு குழுவாக இணைந்து தேவையான உதவிகளை மக்களுக்கு இவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் இந்த உதவியால், அங்கு பசியால் வாடும் மக்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாப்பாடு இல்லாம எப்படி சார் உயிர் வாழ முடியும்...? 'நாங்க ஊருக்கு போகணும்...' கேரளாவில் மாட்டிக்கொண்ட கட்டிட தொழிலாளர்கள்...!
- ‘இப்படிலாம் பண்ணா’... ‘டிக் டாக் பந்தயத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘இறுதியில் நடந்த துயரம்!
- ‘24 வயது’ இளைஞருக்கு கொரோனா... தமிழகத்தில் ‘27 ஆக’ உயர்ந்துள்ள பாதிப்பு... ‘அமைச்சர்’ தகவல்...
- ‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்!
- கூடிய சீக்கிரம் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விடும்...! 'சீனாவின் நிலைமையை முன்கூட்டியே கணித்து சொன்னவர்...' நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்பிக்கை...!
- கொசு கடிச்சா கொரோனா பரவுமா?.. மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..!
- ஒற்றை ‘கிருமி’ உலகம் முழுவதும் ‘பரவும்’... முன்பே ‘கணித்த’ மைக்கேல் ஜாக்சன்... ‘ரகசியத்தை’ பகிர்ந்த ‘பாடிகார்டு’...
- ‘இந்த நேரத்துல அத பண்ணா.. தப்பான முன்னுதாரணமாகிடும்’.. துணை கலெக்டர் எடுத்த முடிவு..!
- 'கொரோனாவை வென்று வீடு திரும்பிய குடும்பம்!'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்!... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்!
- ‘கொரோனா விழிப்புணர்வு’!.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..!