'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெளிவந்த 'உறையவைக்கும்' காரணம்...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் ஊரடங்கின்போது தன்னுடைய வீட்டு வாசலில் நின்று சத்தமாக பேசியதால் இளைஞர் ஒருவர் 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ரஷ்யாவிலும் சிலபகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
யெலட்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 31 வயது இளைஞர் ஒருவருடைய வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தால், அந்த இளைஞர் வெளியே சென்று அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, அதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன் கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக அவர்களை சுட்டுள்ளார். இதில் 4 ஆண்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘எங்களுக்கெல்லாம் ஃபயரே ஸ்ப்ரே மாதிரி!’.. ‘நெருப்பை வைத்து சாகசம் செய்தபோது விபரீதம்!’.. தீயாய் பரவும் வீடியோ!
- பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' திறப்பது குறித்து... 'இந்த' தேதியில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்
- 'தீபம்' ஏத்துனா கொரோனா செத்துருமா?... பிரதமரை அவதூறாக பேசி... 'வீடியோ' வெளியிட்ட இளைஞர்கள் கைது!
- நிறைந்த கல்லறைகள்... 'புதைக்க' இடம் இல்லாமல்... 'சடலங்களை' ரோட்டில் வைக்கும் அவலம்!
- ‘சென்னை முதலிடம்.. கோவை 2வது இடம்!’.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 90,824 பேர்! ஏப்ரல் 5-ஆம் தேதிவரையிலான முழு விபரங்கள் உள்ளே!
- '9 மணி 9 நிமிடங்கள்!'.. ‘பிரதமரின் அழைப்பை ஏற்று’.. சென்னையில் தனது ‘போயஸ் கார்டன்’ இல்லத்தில் கொரோனாவுக்கு எதிராக ‘ஒளியேற்றிய ரஜினிகாந்த்!’
- 'இப்படிப்பட்ட டைம்ல கூட இவங்க பண்ற விஷயம் இருக்கே' ... போலீஸ்காரரின் மனிதநேயத்தை பாராட்டி ... பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் ட்வீட்!
- “கொரோனா சிகிச்சை அளிக்கப்போகும் எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்!”... செவிலியர்களின் நூதன போராட்டம்!
- ‘சட்டையை கிழித்து.. செல்போனை உடைத்து..’ .. ‘கொரோனா பரிசோதனைக்காக சென்ற மருத்துவக் குழுவினருக்கு’.. ‘நேர்ந்த பரபரப்பு சம்பவம்!’