கொரோனா 'ஊரடங்கால்' பரவும் 'மற்றொரு' அபாயம்... 5 ஆண்டுகளில் 'உயிரிழப்பு' மட்டும்... வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் பரவும் காசநோய்க்கு அடுத்த 5 ஆண்டுகளில் வழக்கத்தை விட கூடுதலாக 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும்பாலான நாடுகளில்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு காச நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளான கென்யா, இந்தியா, உக்ரைன் ஆகியவற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாப் டி.பி எனும் உலகளாவிய அமைப்பு தெரிவித்துள்ளது .

வழக்கமாக வேலை காரணமாக வெளியே சென்று வரும் நபர்கள் தற்போது 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பதால் வீட்டில் உள்ள காசநோயாளிகளால் அவர்களுக்கும் அந்த நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் முழுவதும் காசநோயால் வழக்கத்தை விட கூடுதலாக 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய்த் துறை இணை பேராசிரியர், "காசநோய் பாதிப்பை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு முன்னிருந்த நிலை ஏற்பட நீண்ட காலமாகும். ஊரடங்கு காலத்தில் காச நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் இருக்கும் காரணத்தால் இதன் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்