‘அடையாளம் தெரியாத அவரதான் தேடிட்டு இருக்கோம்’... ‘லாக்டவுனுக்கு’ முன்... ‘வாடிக்கையாளர்’ கொடுத்து சென்ற ‘வேறலெவல்’ இன்ப ‘அதிர்ச்சி’...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலால் ஹோட்டல்கள் மூடப்படுவதற்கு முன் வாடிக்கையாளர் ஒருவர் 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ள அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அங்கு நேற்று மட்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளான நிலையில், 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அனைத்து உணவகங்களும் மூடப்பட்டு, ஒரு சில ஹோட்டல்களில் பார்சல் வசதி மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோட்டல்கள் மூடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள ஓட்டல் உரிமையாளர் ரோஸ் எட்லண்ட், “இந்த உலகில் உண்மையான, அற்புதமான மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பூமியில் நாமும் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த வாடிக்கையாளர் அளித்த 10 ஆயிரம் டாலர்களும் 200 ஊழியர்களுக்கு தலா 500 டாலர்கள் என சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாடிக்கையாளர் யார் எனத் தெரியாத நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்போ நிறைய நேரம் இருக்கு'...'17 நாள் கண்டிப்பா பண்ணுங்க'... வீடியோ வெளியிட்ட சைலேந்திர பாபு!
- தமிழகத்தில்’ புதிதாக ‘2 பேருக்கு’ கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை ‘40 ஆக’ உயர்வு... ‘சுகாதாரத்துறை’ தகவல்...
- ‘கொரோனா’ வார்டில் இருந்த ‘3 பேர்’... ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து ‘உயிரிழப்பு’... மரணத்திற்கான ‘காரணம்’ குறித்து சுகாதாரத்துறை ‘விளக்கம்’...
- 'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்!
- 'குடும்பத்தை பாக்க முடியல'... 'தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்'... தன்னை மறந்து செய்த கொடூர செயல்!
- 'கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ்'... 'என்ன காரணம்'?... விளக்கமளித்த சென்னை மாநகராட்சி!
- 'எனக்கு ரொம்ப கஷ்டமான டைம்'... 'ஆனா கொரோனா குறித்து'... மருத்துவர் அஷ்வினின் உருக்கமான பதிவு!
- 'டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரல'... 'கொரோனா வார்டில் இருந்தவருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சி சம்பவம்!
- ‘வீடு திரும்பும் 21 வயது இளைஞர்’.. ‘வெளியான ரிசல்ட்’.. ‘ஆனா 14 நாளைக்கு..!’ அமைச்சர் சொன்ன புதிய தகவல்..!
- குறட்டை விட்டால் கொரோனா வருமா..? கொரானாவுக்கும், குறட்டைக்கும் சம்பந்தம் இருக்கா.? மருத்துவர் விளக்கம்..!