'டிசம்பர் 1ம் தேதி என்ன நடந்தது'?... 'மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள விஞ்ஞானிகள்'...வுகான் மர்ம முடிச்சுகள் அவிழ்கிறதா? இல்லை இறுகுகிறதா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் வுகான் சந்தையிலிருந்து தான் வந்தது எனப் பலரும் கூறி வரும் நிலையில், டிசம்பர் 1ம் தேதி என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் விஞ்ஞானிகள் கூறியுள்ள கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் 1-ந்தேதி வுகானில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து பரவியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அந்த சந்தை மூடப்பட்டது. தற்போது வரை 57 லட்சம் பேரைப் பாதித்துள்ள இந்த நோய்க்கு, இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த சர்ச்சைகள் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒரு குண்டை தூக்கிப் போட்டது. அதன்படி  கொரோனா வுகான் கடல் வாழ் உயிரினங்கள் சந்தையில் தோன்றவில்லை என்றும், அந்த சந்தைக்கு அருகே அமைந்துள்ள வுகான் வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அதிலிருந்து தான் கசிந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அதிபர் டிரம்ப், கொரோனா வைரசின் பிறப்பிடம் பற்றி சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். நிலைமை இப்படி இருக்க, சீன விஞ்ஞானிகள் புதிய ட்விஸ்ட ஒன்றைப் போட்டுள்ளார்கள்.

அதாவது வுகான் கடல்வாழ்உயிரினங்கள் சந்தையில் கொரோனா வைரஸ் உருவானது என்பது அடிப்படை ஆதாரமற்றது எனக் கூறியுள்ளார்கள். இந்த கருத்தைத் தெரிவித்த விஞ்ஞானிகள் தாங்கள் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியதாக தற்போது கூறியுள்ளார்கள். நேச்சர்’ என்ற பத்திரிகையின் இணையதளத்தில் அந்த சீன விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சி முடிவு வெளியாகியுள்ளது.

அதில் ''கலப்பினமாக கொரோனா வைரஸ் தொற்று வுகான் சந்தையில் நிகழ்ந்தது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த சந்தையில் பெருமளவு மக்கள் கூடியதால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்ற நிலையிலும் இது சீன ஆராய்ச்சியாளர்களால் இது திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், கொரோனா வைரசின் தோற்றம் எங்கே என்பது தெரியவில்லை'' எனக் கூறியுள்ளார்கள்.

சீன விஞ்ஞானிகள் கூறியுள்ள இந்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனா வுகான் சந்தையிலும் தோன்றவில்லை,வுகான் வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்திலும் இந்த வைரஸ் உருவாக்கப்படவில்லை என்றால், கொரோனாவின் பிறப்பிடம் தான் எது என பல நாடுகளும் தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான விடை யாருக்குத் தான் தெரியுமோ என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்