சீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை?.. வெளியான ‘புதிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் உள்ள மீன் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அங்குள்ள 'Huannan' மீன் சந்தையில் பணிபுரிந்த நபரே கொரோனவால் முதன் முதலாக பாதிக்கப்பட்ட 'Patient Zero' என அடையாளப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சீன ஆராய்ச்சியளார்கள் இரண்டு கட்டங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அதில் 41 பேரிடம் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் 27 பேர் மீன் சந்தையால் நேரடியாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் மீதமுள்ள நபர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என கண்டறிய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஜனவரியில் இரண்டாம் கட்டமாக 99 நோயாளிகளிடம் ஆய்வு நடந்தினர். அதில் 49 பேர் மீன் சந்தையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மீதமுள்ள 50 பேருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என கண்டறியப்படவில்லை.
இதனால் கொரோனா வைரஸ் வுகான் மீன் சந்தையில் இருந்து பரவியதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என வளைகுடா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வுகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 11 நாட்களில் '92 ஆயிரம்' அழைப்புகள்... 'அந்த' வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை... 'ஜெட்' வேகத்தில் உயர்வு!
- வேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...
- 'டியூட்டி போலீஸாருக்கு உணவு வழங்கிய நபருக்கு கொரோனா உறுதி!'.. 'அதன்பிறகு தெரியவந்த மற்றுமொரு அதிர்ச்சி உண்மை!'
- 'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு!'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்!'
- ‘ரமலான் வாரம் ஸ்டார்ட் ஆகுது.. ஆனா வழக்கமா கொடுக்கும் நோன்பு கஞ்சி’... இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த முடிவு!
- ‘இதுவும் நல்லாத்தேன் இருக்கு..!’.. மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு குரங்கு பார்த்த ‘விநோத’ காரியம்.. வைரலாகும் வீடியோ!
- 'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...
- 'முறையான பரிசோதனை இல்லை’... ‘மே, ஜூன் மாதங்களில்’... ‘உச்சத்தை தொடும் கொரோனா தொற்று’... ‘எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்’!
- 'ஏசி மூலம் கொரோனா பரவுமா?...' 'அதிர்ச்சிமேல் அதிர்ச்சி' தரும் 'ஆய்வு முடிவுகள்...' 'புதிய ஆய்வு' குறித்து 'சீனா விளக்கம்...'
- 'சைக்கிள் அப்புறம் கூட வாங்கிக்கலாம்...' 'சிறுக சிறுக சேமித்த பணத்தை...' கொரோனா நிவாரண நிதிக்காக அள்ளிக் கொடுத்த சிறுவன்...!