'யாருக்காக அழுறது, புருஷனுக்காகவா, பிள்ளைகளுக்காகவா'...'சுற்றிலும் பிண வாடை'... நம்பிக்கையை தொலைக்கும் மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்னும் பேயின் ஆட்டம், சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் தொடங்கியது. தற்போது 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் மனித உயிர்களை ஈவு இரக்கமில்லாமல் காவு வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா மீது கொரோனாவிற்கு என்ன கோபமோ தெரியவில்லை, அங்கு அது கோர தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2,569 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை வரை 26 ஆயிரத்தில் இருந்து ஒரே நாளில் 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே கொரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடு என்ற பரிதாபமான பெயரை அமெரிக்கா எடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒரே நாளில் இதுபோன்று அதிகபட்சமான உயிரிழப்புகளை இதுவரை எந்த நாடும் கொரோனா வைரஸால் சந்தித்தது இல்லை. தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகள் அமெரிக்க மக்களை மட்டுமல்லாது, அங்குள்ள மருத்துவர்களையும் நம்பிக்கை இழக்க செய்துள்ளது. ஒரே வீட்டில் கணவன் மற்றும் குழந்தைகள் இறந்த நிலையில் யாருக்காக கண்ணீர் சிந்துவது என கூட தெரியாமல் பலர் தவித்து வருகிறார்கள். எங்கு நோக்கினும் சடலங்களாகவும், மக்களின் அழுகுரல் மட்டுமே கேட்கும் அவல நிலைக்கு அமெரிக்கா தற்போது சென்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்