உலகளவில் 'சரிபாதி' மரணங்கள்... இந்த '3 நாடுகளில்' மட்டும்... கொரோனாவால் '50 ஆயிரம்' பேர் உயிரிழப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாட்டில் தற்போது கட்டுக்குள் வந்து விட்டது. ஆனால் பிற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளும் கொரோனாவால் ஆடிப்போய் இருக்கின்றன. உலகில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களில் சரிபாதி மேற்கண்ட நாடுகளில் நிகழ்ந்து உள்ளன. இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 18,279 பேரும், அமெரிக்காவில் 16,736 பேரும் ஸ்பெயின் நாட்டில் 15,843 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்து இருக்கின்றனர்.

மொத்தமாக மேற்கண்ட நாடுகளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர். சீனா, கியூபா மருத்துவர்கள் இத்தாலிக்கு உதவ முன்வந்தும் இன்னும் கூட அங்கு மக்கள் அதிகளவில் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்