‘மோசமான நிலையில் இருக்கும் நாடுகள்’... ‘இருமடங்கு உயரும் அபாயம்’... 'ஐ.நா எச்சரிக்கை'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிற்செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதன் விளைவாக, கோடிக்கணக்கான பேர் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 26.5 கோடியாக உயரும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே உலக அளவில் போதிய உணவின்றி பசியால் வாடுபவர்கள் பட்டியலில் 13.5 கோடி மக்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் கூடுதலாக 13 கோடி மக்கள் அந்தப் பட்டியலில் இணையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. ‘‘தற்போதைய சூழலை எதிர்கொள்ள நாம் ஒன்றினைய வேண்டும். இல்லையென்றால் உலகம் பெரும் விலை கொடுக்க நேரிடும். மிகப் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்படும். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவிப்பார்கள்’’ என்று ஐ.நா-வின். உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இயக்குநருமான ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மிகக் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை மிக மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நிலைமை மோசமடைந்து வருவதாக சமீபத்தில் ஐ.நா அறிக்கை வெளியிட்டு இருந்தது. கிட்டத்தட்ட 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் கடும் வறுமையை எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரமலான் நோன்பு நேரத்தில்'... 'இதெல்லாத்தையும் கடைப்பிடிங்க’... ‘உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்'!
- 'இதுவரை இல்லாத மாற்றம்!'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- எல்லாமே 'மர்மம்' தான்... கொரோனா போல 1500 கொடிய 'வைரஸ்' அங்க இருக்கு... சீனாவுக்கு எதிராக 'சிஐஏ'-வை ஏவிய அமெரிக்கா!
- 'மிரட்டும்' கொரோனாவால் 'இடிந்து' நிற்கும் நாடு... '2 மாதங்களுக்கு' பிறகு... 'முதல்முதலாக' வெளிவந்துள்ள 'நம்பிக்கை' செய்தி...
- அந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா?.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..!
- “2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்!” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்!
- சென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'
- 'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' "மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?..."
- கொளுத்தும் வெயிலில்... கொட்டும் மழையில்... மரத்தின் மீது ஏறி... மாணவர்கள் கல்விக்காக யாரும் செய்யத் துணியாத காரியம்!.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!