'முழுமையாக' நீக்கப்பட்ட 'லாக் டவுன்'... 'அறிகுறிகள்' இல்லாமலேயே ஏற்படும் 'பாதிப்பால்'... 'கவலை' தெரிவிக்கும் 'நிபுணர்கள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் நகரில் இருந்த லாக் டவுன் 73 நாட்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1,000 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 62 பேரில் 59 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எனவும்,  அவர்களைத் தவிர ஷாண்டோங் மாகாணத்தில் இருவருக்கும், குவாங்டோங் மாகாணத்தில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அங்கு 1042 ஆக அதிகரித்துள்ள நிலையில், நேற்று உயிரிழந்த 2 பேருடன் சேர்த்து சீனாவில் பலி எண்ணிக்கை 3,333 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் மொத்தமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,802 ஆக உள்ள நிலையில், 77,279 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் உள்ள வுஹானில் 73 நாட்களுக்குப் பிறகு லாக்டவுன் நீக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஹூபேயில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லையென்றாலும், அதற்குள் நாம் நம் முழுதுமாக அடைப்பிலிருந்து விடுபடக் கூடாது எனவும்,  நோய்க்கான அறிகுறிகள் இல்லாமலேயே பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மூலமாக நாம் இரண்டாம் அலைப் பரவலுக்கு வித்திட்டு விடக்கூடாது எனவும் தொற்று நோய் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

லாக் டவுன்  நீக்கப்பட்டதும் வுஹானிலிருந்து வெளியே வேலைக்குச் செல்பவர்கள் ரயில் நிலையங்களில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், வுஹான் ரயில்களில் சுமார் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்று பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் நுழையும் போதே பயணிகள் ஸ்கேன் செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டுவதுடன்,  புல்லட் ரயில்கள், பிளாட்பாரம் மற்றும் மக்கள் காத்திருப்பு ஹால்கள் என அனைத்திற்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதும், முகக்கவசம் கட்டாயமென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்