'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'?... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு கொரோனா இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோவின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பல நாடுகளையும் அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இதனால் உலகநாடுகள் பலவும் போர்க்கால அடிப்படையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்குச் சோதனை நடத்தப்பட்டதாகவும், இருவரும் தங்களைத் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனைக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் ஜஸ்டின், அதுவரை வீட்டிலிருந்து பணியாற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த பதிவு கனடா நாட்டு மக்களைச் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

CORONAVIRUS, COVID-19, JUSTIN TRUDEAU, CANADA PM, SOPHIE GREGOIRE-TRUDEAU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்