'நாட்டின் மிக இளவயது கொரோனா நோயாளி'... ‘அதிகப்படியான உயிரிழப்பால் நிலைகுலைந்துள்ள நேரத்தில்'... 'நம்பிக்கை நட்சத்திரமான 2 மாத குழந்தை'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இத்தாலியின் மிகக் குறைந்த வயது கொரோனா பாதிப்பு நோயாளி எனக் கருதப்பட்ட 2 மாத குழந்தை நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால், அந்நாட்டை விட ஐரோப்பிய நாடுகளில் பலவும் கொடூரமாக பாதிக்கப்பட்டாலும், இத்தாலியில் தான் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139,422 ஆகவும், உயிரிழப்பு 17,669 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 18-ம் தேதி தெற்கு நகரமான பாரியில் உள்ள மருத்துவமனையில் தாயும் இரண்டு மாத குழந்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதான் நாட்டின் மிக குறைந்த வயது நோயாளி என கருதப்பட்ட 2 மாத குழந்தை. சீரான வெப்பநிலையுடன், காய்ச்சலுக்கான அறிகுறி இல்லாததால், தற்போது கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது. இந்த சம்பவம் நிலைகுலைந்துப்போன இத்தாலிக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்