'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவை பொறுத்த வரை கொரோனாவின் பாதிப்பு ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தற்போது கூறியுள்ளார்.
இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டதால் தற்போது நோய் பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கடுமையான பொது முடக்கம் காரணமாக வைரஸ் பரவல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கப்பட்டு விட்டதாகவும், மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் சில நகரங்களில்தான் நோய் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பட்டார்.
பொது முடக்கத்தை நீக்கிவிட்டால் நோய் பரவல் தன்மை வெடிப்பாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் இந்தியாவில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் நோய் பரவுதல் வேகமாக இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் நோய் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'உன்ன தனியா விட்ர மாட்டேன் கொல்லம்மா'... 'எந்த மனைவிக்கும் இந்த துயரம் வர கூடாது'... நொறுங்கிய இதயத்துடன் வந்த சென்னை பெண்!
- 'இந்த ஒரு வார்த்த போதும் சாமி'... 'ஐடி' மக்களின் வயிற்றில் பாலை வார்த்த 'காக்னிசன்ட்'... 'திக்குமுக்காட வைத்த அதிரடி அறிவிப்பு'
- 'இது என்னடா டிசைன் டிசைனா பரவுது'... 'இங்கு மட்டும் மாறுபட்ட கொரோனா வைரஸ்'... கெட்டதிலும் இருக்கும் நன்மை!
- 'கொரோனா பேஷண்ட் வார்டுல இருந்து எஸ்கேப் ஆயிருக்கார்...' 'ஆள கண்டுபிடிக்க பெரும் சவாலா இருக்கு...' அட்மிட் ஆகுறப்போவே பக்கா ப்ளானிங்...!
- 'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...!
- ‘ஒருபக்கம் கொரோனா’.. ‘மறுபக்கம் இந்த கொடுமை வேறையா..!’.. அமெரிக்காவை துரத்தும் அடுத்த துயரம்..!
- ‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’!.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..!
- 'எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா'...'டிரம்புக்கு தினந்தோறும் பரிசோதனை'... அவரே சொன்ன காரணம்!
- மறுபடியும் 'மொதல்ல' இருந்தா?... 30 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கையால்... 'அதிர்ந்து' போய் நிற்கும் நாடு!