'கொரோனா கடைசி கிடையாது'... 'அடுத்த பெருந்தொற்றுக்கு'... 'இன்னும் தயாரா இருக்கணும்'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள WHO தலைவர்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தற்போதை விட சிறப்பாக தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும், உலகம் முழுவதும் 2 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் கொரோனா உயிரிழப்புகள் 9 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அவர், "இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல. தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் அடுத்த முறை இதுபோன்ற தொற்றுநோய் வரும்போது, அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் தற்போதை விட சிறப்பாக தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை'... 'எஸ்.பி.பி சரண் சொன்ன குட் நியூஸ்'... நிம்மதி அடைந்த ரசிகர்கள்!
- 'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
- 'இந்த தடுப்பூசி பாதுகாப்பா இருக்கு'... 'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'நம்பிக்கை தரும் தகவலால் ஆய்வை தீவிரப்படுத்திய இந்தியா!'...
- ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து... தமிழகத்தில் 'இப்படித்தான்' பரிசோதிக்கப்படும்!.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்!
- 5 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய வெளியூர்களுக்கான பொதுப் போக்குவரத்து!.. 'இதெல்லாம்' கட்டாயம் கடைபிடிக்கணும்!.. ரயில், பேருந்து சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
- 'தடுப்பூசிக்கான காத்திருப்பு எல்லாம் முடிஞ்சுது'.... 'இந்த வாரத்துலயே'... 'மக்களுக்கு வெளியான குட் நியூஸ்'... 'தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே அதிரடி காட்டும் நாடு!'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- ‘அடுத்த 2 வாரத்துல.. ஏராளமானோர் ICU-வில் சேர்க்கப்படலாம்!’... ஊரடங்கு தளர்வால், உச்சமாகும் கொரோனா.. எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!
- 'இத்தனை நாள்தான் ஆன்டிபாடிகள் நீடிக்கும்'... 'அப்பறம் மீண்டும் கொரோனா தாக்குமா?'... 'ஆய்வு முடிவு கூறும் முக்கிய தகவல்!'...
- தமிழகத்தில் மேலும் 61 பேர் கொரோனாவுக்கு பலி!.. தொற்றின் வேகம் குறைகிறதா?.. முழு விவரம் உள்ளே