'டிரம்புக்கு' 'கொரோனா' வைரஸ் பரிசோதனை... 'முடிவு என்ன?'... நடிகர் 'டாம் ஹாங்ஸ்' குறித்த மோசமான 'வதந்தி'... 'உண்மை நிலை என்ன?...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருவதால் அங்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவை அண்மையில் சந்தித்தார். அவருடன் வந்த பாபியோ வாஜின்கார்ட்டன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா? என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

கொரோனா தொற்று உடையவரை சந்தித்த போதும் அதிபர் ட்ரம்ப் பரிசோதனைக்கு தயாராக இல்லை என பத்திரிகையாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில் தீவிர ஆலோசனைக்கு பிறகு வெள்ளை மாளிகையின் டாக்டர் ஷான் கான்லி அதிர் டிரம்புக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொரோனா பரிசோதனை நடத்தினார்.  24 மணி நேரத்துக்கு பிறகு பரிசோதனை முடிவு குறித்த அறிக்கையை அவர் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையில் ’டிரம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்‘ என டாக்டர் ஷான் கான்லி தெரிவித்துள்ளார்.

இதேபோல், கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ஆஸ்திரேலியாவில் மனைவி ரீட்டா வில்சனுடன், தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். டாம் ஹாங்கஸ் உயிரிழந்ததாக, இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, செய்தி வெளியிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாம் ஹாங்க்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர், தான் உடல்நலத்துடன் உள்ளதாகவும், வதந்திகளால், தான் அதிகம் பாதிக்கப்படும் நபர் என்றும் தெரிவித்துள்ளார்.

AMERICA, DONALD TRUMP, TOM HANKS, CORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்