"ஊரே காலியா இருக்கு..." "ஆனா 'துப்பாக்கி' வாங்க 'வரிசை கட்டி' நிக்கிறாங்க..." "எதுக்குத் தெரியுமா?..."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொள்ளையர்கள் பீதி காரணமாக  துப்பாக்கி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரனோ வைரஸால் 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்க மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

தற்போது, கொரோனா பயத்தை விட கொள்ளையர்கள் பயம் அமெரிக்கர்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். அவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் பலர் துப்பாக்கி வாங்க ஆயுதம் விற்கும் கடைமுன் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் 1500 டாலர் கொடுத்து கைதுப்பாக்கி ஒன்றை வாங்கி உள்ளார். அவர் யு.எஸ்.ஏ டூடேக்கு அளித்த பேட்டியில், "இனி என் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்" எனக் குறிப்பட்டுள்ளார்.

22 வயதான இளம்பெண் துப்பாக்கிக்கு தேவைப்படும் தோட்டாக்களை  2 மணி நேரம் காத்திருந்து வாங்கியதாக குறிப்பிடுகிறார். தற்போதைய சூழலில் அமெரிக்க மக்கள் கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

AMERICANS, CORONA, FEAR, GUNS, ROBBERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்