'கொரோனா' வைரஸ் உங்கள் 'மனைவி போன்றது...' 'ஆரம்பத்திலேயே' 'கட்டுப்படுத்தி விட' வேண்டும்... 'உதாரணம்' கூறி 'சர்ச்சையில்' சிக்கிய 'மந்திரி...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது, அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும், என்ற இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertising
Advertising

இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,496 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத்  ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது, "கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அமைச்சரின் இந்த பேச்சு நாட்டில் பெண்கள் மீதான பாலியல் மற்றும் தவறான மனநிலையை மேலோங்கி இருப்பதை காட்டுகிறது என மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்