‘கொரோனா வைரஸ் பாண்டமிக்?’ .. என்னடா புது ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆயிருக்கு?! உலக சுகாதார மையம் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

‘பாண்டமிக்’ எனப்படும் கொரோனாவை உலகளாவிய நோய்த்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட உயிர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 6 ஆயிரம் பேரின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் பாண்டமிக் வகையைச் சேர்ந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக கொரோனா வைரஸ் பரவுதலை எண்டமிக், எபிடெமிக் மற்றும் பாண்டமிக் என 3 வகைகளாக பிரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எண்டமிக் என்பது காலவரையறையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பரவக்கூடிய வைரஸ் வகை என்றும் அம்மை, மலேரியா போன்ற நோய்கள் இதில் சேரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2வது வகையான எபிடெமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மழைக்காலத்தில் உண்டாகும் காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தொந்தரவுகளைச் சொல்லலாம்.

3வதாக தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ள பாண்டமிக் வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பரவும் தன்மை கொண்டவை என்றும் இது மனிதர்களுக்கு மனிதர் பரவும் தன்மை கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் தனிமனித விழிப்புணர்வு அவசியம் என்றும் உலக சுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

WHO, CORONAVIRUSUPDATE, CORONAOUTBREAK, CORONAVIRUSPANDEMIC, CORONAVIRUSINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்