'ஒரு லட்சத்தை' நெருங்கும் 'பலி எண்ணிக்கை...' இந்த 'நூற்றாண்டின்' மிகப்பெரிய 'மனித உயிரிழப்பு...' 'திகைத்து நிற்கும் உலக நாடுகள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதால் உலக நாடுகள் திகைத்துப் போய் உள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது.

இதன் வேகம் சீனாவில் குறைந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை புரட்டிப் போட்டுள்ளது. வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் உள்ளன.

இதில் இத்தாலியில் மட்டும் 18 ஆயிரத்து 279 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாடு கலங்கிப் போயுள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 16,691 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 15,447 பேரும், ஃபிரான்சில் 12,210 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்நாடுகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், உயிரிழப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 16 லட்சத்து 3 648 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 95 ஆயிரத்து 716 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை நாளையே ஒரு லட்சத்தைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நூற்றாண்டில் மனித குலம் கண்டிராத மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்து வருவதால் உலக நாடுகள் திகைத்துப் போய் உள்ளன. நோய்த்தாக்குதலை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என தெரியாமல் திணறி வருகின்றன. 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-

அமெரிக்கா - 16,691

ஸ்பெயின் - 15,447

இத்தாலி - 18,279

பிரான்ஸ் - 12,210

ஜெர்மனி - 2,607

சீனா - 3,336

ஈரான் - 4,110

இங்கிலாந்து - 7,978

பெல்ஜியம் - 2,523

நெதர்லாந்து - 2,396

இந்தியா - 226

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்