'ஃபிரீசர்' இறைச்சி 'ஜாக்கிரதை'... 'கொரோனாவின்' வசிப்பிடம் இதுவாகக் கூட இருக்கலாம்... 'சீனாவில்' படித்த 'திருப்பூர் மாணவர்' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறைச்சியை வாரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்டதால் கூட கொரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என சீனாவில் மருத்துவம் படித்து வரும் திருப்பூர் மாணவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது உறுதியாக தெரியாத நிலையில், பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு வகை பாம்பை இறைச்சியாக பயன்படுத்தியதால் இந்த வைரஸ் பரவியதாக சீன அரசு தெரிவித்தது. இது சீனாவின் பயோ லேப்பிலிருந்து வெளியான வைரஸ் என அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பின. வௌவாலிலிருந்து இந்த வைரஸ் பரவியதாக ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் சீனாவில் மருத்துவம் படித்து வரும் திருப்பூரைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர்  இறைச்சியை வெகுநாட்களாக குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்து விற்பனை செய்யப்பட்டதால் கொரோனா வைரஸ் உருவாகி பரவியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

திருப்பூரை அடுத்துள்ள கணக்கன் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள சண்முகத்தின் மகன் அபிஷேக் சீனாவில் உள்ள ஜிங்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

கடந்த 1-ந் தேதி அபிஷேக் திருப்பூர் வந்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து அவர் தெரிவித்தபோது, இறைச்சியை வாரக்கணக்கில் ஃபிரீசரில் வைத்து விற்பதாலும் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் எனக் குறிப்பிட்டார். சீன மக்கள் பாதியளவு வேக வைக்கும் இறைச்சியையே விரும்பி உண்ணுகின்றனர் என்றும், அதனால், வெகுநாட்களாக ஃபிரீசரில் வைக்கப்பட்ட இறைச்சியில்  வைரஸ் உருவாகி பரவியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார்.

CORONA, CHINA, FREEZER MEAT, THIRUPUR, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்