'லிஸ்ட்ல நம்ம பேரு இருக்குமா?'... 'மெயில் எப்ப வரும்'... 'கதிகலங்கி நிற்கும் ஊழியர்கள்'... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே தலைகீழாக புரட்டி போட்டிருக்கும் நிலையில், 12 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. விமான சேவை இல்லாத காரணத்தினால் விமான நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தசூழ்நிலையில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்துள்ளது. உலகின் பல நாடுகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். ஆனால் கொரோனாவால் தற்போது கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்படவுள்ள 12 ஆயிரம் பேரில், நமது பெயரும் இருக்குமோ என்ற அச்சம் பல ஊழியர்களிடம் எழுந்துள்ளது. பணிநீக்கம் குறித்த தகவல் எப்போது வரும் என ஊழியர்கள் பலரும் பயத்துடன் பொழுதை கழித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னையில் ஒரே தெருவில்....' '11 பேருக்கு கொரோனா...' கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா!.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- 'அனைத்து' கொரோனா நோயாளிகளும் 'குணமடைந்தனர்'... பெய்ஜிங் 'சிறப்பு' மருத்துவமனையை மூடும் 'சீனா'...
- 'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்கையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...
- "55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு!" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு!
- 'இந்த பெண் தான் காரணமா?'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. யார் இவர்?
- 'உங்களால நாங்க மகிழ்ச்சியாவே இல்ல’... 'லாபம் பார்ப்பதற்காகவே இப்படி செஞ்சிருக்கீங்க’... ‘சீனாவை விடாமல் துரத்தும் அமெரிக்கா’... என்ன நடந்தது?
- 'எத்தனை' ஆயிரம் வரை உயிரிழப்பு 'உயரும்?'... இதுவரையில் எடுத்த 'சிறந்த' முடிவு?... அதிபர் 'ட்ரம்ப்' பதில்...