'கோடிகளில்' வருமானம் இருந்தும்... லாக்டவுனை 'சமாளிக்க' முடியாமல்... 'தொழிலதிபர்' செய்யும் காரியம்!...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலபதிபர் ஒருவர் ஊரடங்கில் தினமும் இந்திய மதிப்பில் 1,000 முதல் 1,500 ருபாய்க்கு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். ஊரடங்கால் நீண்ட நாட்களாக வீட்டிலே இருந்த மாஸ்கோ நகரைச் சேர்ந்த தொழிலதிபர் செர்ஜேய் நோச்சொவ்னிக்கு வீட்டிலேயே இருப்பது போர் அடித்துள்ளது.
அப்போதுதான் அவர் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை டோர் டெலிவரி செய்யப்படுவதை கவனித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக டெலிவரி பாயாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். தற்போது தினமும் சுமார் 20 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று உணவுப் பொருள்களை அவர் டோர் டெலிவரி செய்து வருகிறார். செர்ஜேய் நடத்தி வரும் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துப் பேசியுள்ள செர்ஜேய், "இந்தப் புதிய வேலை எனக்கு உடலளவில் அதிக நம்பிக்கை தருகிறது. எங்களுடைய மஞ்சள் நிற ஆடைகள்தான் வாடிக்கையாளர்களால் கவனிக்கப்படுகிறது. டெலிவரி செய்யும் நபர்களை அவர்கள் கவனிப்பதில்லை. மேலும் டெலிவரி நிறுவனத்துடன் என்னுடைய நிறுவனம் புதிதாக ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. லாக் டவுனை மறுபக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “லட்சம் பேரை தாக்கி உலகம் முழுதும் பரவும்!”.. - அப்பவே சொன்ன பில்கேட்ஸ்!.. “வீட்டுக்கு அடியில உணவு சேமிச்சு வெச்சிருக்கோம்!”- அசர வைத்த மெலிண்டா கேட்ஸ்!
- ‘கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் மருந்து’... ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்... ‘எச்சரித்த’ இந்திய மருத்துவ கவுன்சில்!
- ‘பதைபதைக்கும் வெயிலில்’.. ‘கைக்குழந்தையை’ தூக்கிக் கொண்டு 10 நாட்கள்..!’.. பெண் செய்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!
- 83 ஆயிரத்திற்கும் மேல் 'பாதிப்பு'... 5 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'தீவிர' பாதிப்பிலும் ஊரடங்கை 'தளர்த்தியுள்ள' நாடு... நிபுணர்கள் 'எச்சரிக்கை'...
- ‘இரவு, பகல் பாராமல்’... ‘கடைசி மூச்சு வரை செவிலியர் பணி’... ‘வெளியான உருக்கமான தகவல்’!
- ஊரடங்கிற்கு பின் 'பாதிப்பு' அதிகரித்தாலும்... 'இது' குறைவே... மத்திய அரசு வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...
- ‘கொரோனா தொற்று’... ‘மிக மோசமான நிலையில் உள்ள நகரங்கள் இவைதான்’... ‘தீவிரமடையும் கட்டுப்பாடுகள்’!
- 'சென்னையில் 3 வயது குழந்தை உள்பட’... ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று’!
- தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா!.. 46 பேர் டிஸ்சார்ஜ்!.. முழு விவரம் உள்ளே!
- கொரோனா தொற்றால் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? பரவாதா?.. விரிவான விளக்கம்!