'வைரஸ்களில்' மிக மோசமானது 'கொரோனா...' 'எபோலா', ' நிபா' எல்லாம் இதற்கு முன்பு 'ஒன்றுமில்லை'... 'வியக்க' வைக்கும் 'விஞ்ஞானியின்' கூற்று...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தான் ஆய்வு செய்த நோய்களில் கொரோனாவே மிகவும் ஆபத்தானது என நோய்கள் குறித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து வரும் டாக்டர் ரிச்சர்ட் ஹாட்செட் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 3,100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். வைரசை தடுக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்த்தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும், பிரிட்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஹாட்செட், தான் ஆய்வு செய்தநோயிகளிலேயே கொரோனாவே மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பல நிபுணர்களில் ஒருவரான இவர், தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகிறார். இவரது சிஇபிஐ நிறுவனத்திற்கு கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ரூ.200 கோடியை பிரிட்டன் அரசு வழங்கியுள்ளது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எபோலா மற்றும் நிபா போன்ற வைரஸ்கள் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் தொற்று கொரோனா அளவிற்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். .

CORONA, VIRUS, MOST DANGEROUS, DISEASES, SCIENTIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்