'கொரோனா' என்னும் 'பயோ வெப்பனை'.... திட்டமிட்டு பரப்பியது 'சீனா'... '20 லட்சம் கோடி' நஷ்டஈடு கோரி 'அமெரிக்கா வழக்கு'... 'உலக நாடுகள் ஆதரவு...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

'கொரோனா எனும் பயோ வெப்பனை திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 டிரில்லியன் டாலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும்' எனக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

வழக்கு மனுவில், ''கொரோனா வைரஸ் ஒரு 'பயோலாஜிக்கல் ஆயுதம்'. ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றும்படி அதை சீனா வடிவமைத்துள்ளனர். அந்த வைரசால், உலகில் 3,34,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர்; 17,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்து நிறைந்தது. உலக பொதுச்சட்டத்தை மீறி இந்த வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்' எனக் கோரியுள்ளனர்.

மேலும், சீனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு வெற்றி பெற, உலக நாடுகள் துணை நிற்க வேண்டும்' எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதை ஏற்பதாகப் பல்வேறு நாட்டு மக்களும் பதிவிட்டு வருகின்றனர்.

CORONA, CHINA, BIO WEAPON, 20 TRILLION, DOLLER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்