சமூக இடைவெளியை '2022 வரை' கடைப்பிடிக்க 'நேரிடும்...' '2025-ல்' மீண்டும் 'கொரோனா' தாக்க வாய்ப்பு... 'ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2022 வரை சமூக இடைவெளியை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டனர். அதன் முடிவுகளில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி. 2025-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று தாக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மேலும், சமூக இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினால், அது புதிய கொரோனா நோயாளிகள் பெருமளவில் உருவாக வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் எதுவும் இல்லாத நிலையில், 2022-ம் ஆண்டு வரை சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக இடைவெளியை கோடை காலத்தின்போது தளர்த்தினால், அது குளிர்காலத்தில் ‘புளு’ காய்ச்சல் சீசனுடன் இணைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் ‘கோமாவுக்கு’ போன கர்ப்பிணி.. குணமாகி குழந்தை முகத்தை ‘முதல்முறையா’ பார்த்த தாய்.. உருகவைத்த வீடியோ..!
- 'கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா'... 'எப்பா சாமி ஆள விடுங்க'... என்ன 'டிரம்ப்' இப்படி ஒரு முடிவ எடுத்துட்டாரு!
- 'உலக நாடுகள்' அனைத்தும் 'கொரோனா பீதியில்...' 'ஆனால் சைலண்டா...' 'பூமிக்கடியில் சீனா பார்த்த வேலையை பாருங்க...'
- 'இது நம்ம லிஸ்ட்-லயே இல்லையே!'.. நூதன முறையில் செமஸ்டர் நடத்த 'ப்ளான்!'... 'வாட்ஸ் அப்' மூலம் மாணவர்களை அலறவிட்ட பல்கலைக்கழகம்!
- 'சுழற்றி அடித்த கொரோனா, பட் பயப்படாதீங்க'... 'யாரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்' .... 'ஆனா இத எதிர்பாக்காதீங்க' ... டிசிஎஸ் அதிரடி!
- ‘அந்த மனசுதான் சார் கடவுள்’!.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கிய தூய்மை தொழிலாளர்கள்..!
- வாயடைத்து நிற்கும் உலக நாடுகள்!.. 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!.. என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்?
- 'நம்புங்க என் மகன் கொரோனாவால சாகல'... 'மனிதத்தை மறந்த சொந்த கிராம மக்கள்'... இளம் மருத்துவரின் தாய் செய்த விபரீதம்!
- கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்... அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட செவிலியர்கள்!... பதறவைக்கும் பின்னணி!
- சீனாவின் வுகான் ‘மீன் சந்தையில்’ இருந்து கொரோனா பரவவில்லை?.. வெளியான ‘புதிய’ தகவல்..!