'பஸ்ல ஒருத்தர் கிட்ட இருந்து'... '23 பேருக்கு பரவியிருக்கு'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள ஆய்வாளர்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பேருந்தில் பயணம் செய்த கொரோனா நோயாளி ஒருவர் மூலம் 23 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மணி நேரத்திற்குள் பேருந்தில் உடன் இருந்த குறைந்தது 23 பேருக்கு வைரஸை பரப்பியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதற்கு முன், ஜெஜியாங்கில் பேருந்தில் ஒரு புத்த கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய சில மணிநேரங்களில் சிலருக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வுஹானை சேர்ந்தவர்களுடன் குழுவாக சென்று வந்துள்ளனர். அதைவைத்து கொரோனா வைரஸின் பரவக்கூடிய பாதைகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் 100 நிமிடம் பேருந்தில் ஒன்றாக பயணத்த 68 பேரில் ஒருவரிடமிருந்து 23 பேருக்கு கொரோனா பரவியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் பேருந்து மத்திய ஏர் கண்டிஷனர்கள் உடன் உட்புற காற்று மறுசுழற்சி முறையில் இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலம் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க குறிப்பாக காற்றோட்டம் இல்லாத இடங்களில் 6 அடி (2 மீட்டர்) தூரம் போதுமானதாக இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன்முலம் முக்கியமாக கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடும் என்ற முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று மறுசுழற்சி முறையிலுள்ள மூடிய சூழலில் கொரோனா பாதித்தவருடன் பேருந்துக்குள் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக முடிவுகள் தெரிவித்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பார்வைக்கே வேட்டு வெச்சிடும்!'.. உங்க சானிடைஸர்ல இது கலந்திருக்கானு 'செக்' பண்ணிக்கோங்க! அதிர்ச்சி தரும் ஆய்வு!
- 'கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' 'பஸ்ல ஏறினப்போ புடவ சிக்கி...' 'நர்ஸ்க்கு நடந்த விபத்து...' 'அதுக்கப்புறம் தெரிய வந்த உள்ளத்தை நொறுக்கும் சோகம்...!
- 'ஐந்தில் ஒருவருக்கு கொரோனா'... 'சென்னையில் இன்னும்'... 'எத்தனை பேர் பாதிப்படைய வாய்ப்பு?'.. 'வெளியாகியுள்ள ஷாக் ரிப்போர்ட்!'...
- "இதுதான் உண்மையான 'medical miracle' போல",,.. பின்னாடி வழியா 'கம்பி' ஒண்ணு நுழைஞ்சு,,.. 'தோள்' வழியா வெளிய வந்துருக்கு, ஆனாலும்... வியந்து போன 'மருத்துவர்கள்'!!!
- பாகுபலியோடு ஒப்பிட்டு முதல்வரை புகழ்ந்து தள்ளிய மாணவர்கள்!.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்!.. செம்ம ஹைலைட் 'இது' தான்!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் மோதல்... என்ன தான் நடக்குது?.. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் 'இது' தான்!.. சீனா அடித்த பல்டி!
- 'என்ன சார் சொல்றீங்க'...'இதுல தான் சிக்கலே இருக்கு'... 'அரியர்' மாணவர்களுக்கு பாஸ் போடுவதில் எழுந்துள்ள பிரச்சனை!
- 'குவாரண்டைனில் இருந்து எஸ்கேப்'... 'ஜாலியா காதலி வீட்டிற்கு வந்து கப்போர்டில் ஒழிந்த இளைஞர்'... 'இதுக்கா ஏணி புடிச்சு எஸ்கேப் ஆகி வந்தேன்'... அல்டிமேட் ட்விஸ்ட்!
- 'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...