இந்த இடம் தான் Safe.. பூமிக்கு அடியில் இருக்கும் நகரம்.. உள்ளேயே செட்டில் ஆன ஆயிரக்கணக்கான மக்கள்.. சுவாரஸ்ய பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் பூமிக்கு அடியே பல ஆண்டுகளாக மக்கள் வசித்துவருகின்றனர். இது பலரையும் ஆச்சரியப்படுத்தினாலும் இதற்கு அம்மக்கள் சொல்லும் காரணம் உண்மையில் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | சிவ பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்ளும் கால பைரவர்.. பரவசத்துடன் பார்த்துச்செல்லும் பக்தர்கள்.. வீடியோ..!

ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது கூபர் பெடி எனும் நகரம். இங்கே உள்ள சுரங்கங்களில் ஒபல் (Opal) எனப்படும் ஒருவித கல் வெட்டியெடுக்கப்படுகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் ஒபல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து அந்த கல்லை வெட்டியெடுக்க ஏராளமான சுரங்கங்கள் இப்பகுதியில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

Image Credit :  Mark Kolbe/Getty Images

அவற்றுள் பாதி தற்போது இயங்கவில்லை என்றாலும், இன்றைய தேதியிலும் ஒபல் வெட்டியெடுக்கும் முக்கியமான இடங்களில் இந்த கூபர் பெடி நகரம் முன்னிலை வகித்துவருகிறது. இங்கே 1916 ஆம் ஆண்டு ஒபல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் உள்ளூர் மக்கள், அப்போதே சுரங்கங்களில் தங்கி பணிபுரிய ஏராளமானோர் இப்பகுதிக்கு வரத்தொடங்கியதாக தெரிவிக்கின்றனர். உலகின் ஒபல் சந்தையில் 95 சதவீதம் ஆஸ்திரேலியாவில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இவற்றுள் பெரும்பாலானவை இந்த கூபர் பெடி நகரத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்படுபவை தானாம்.

Image Credit :  Mark Kolbe/Getty Images

ஆரம்ப காலகட்டத்தில் இந்த சுரங்கங்களில் பணிபுரிந்த மக்கள் தங்கும் இடங்களை உருவாக்குவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். காரணம், இப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பநிலை. கோடை காலங்களில் இப்பகுதியில் 53 டிகிரி வரையில் வெப்பம் இருக்குமாம். ஆகவே, பூமிக்கு அடியே வீடுகளை உருவாக்கி வசிக்க துவங்கிவிட்டனர் இம்மக்கள்.

Image Credit :  Mark Kolbe/Getty Images

இன்றைய தேதியில் கூபர் பெடி நகரத்தில் வசிக்கும் 3,500 பேரில் சுமார் 60 சதவீதமான மக்கள் பூமிக்கு அடியில் வசித்து வருகின்றனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக இங்கே மின்சார வசதியை அரசு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. வடக்கு திசையில் இருந்து வீசும் காற்றில் இருந்தும், கொளுத்தும் கோடை வெப்பத்தில் இருந்தும் தங்களை பாதுகாக்க இந்த சுரங்க வீடுகளை விட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள் மக்கள்.

Image Credit :  Mark Kolbe/Getty Images

அதுமட்டும் அல்லாமல், இந்த சுரங்க நகரத்தின் உள்ளே தேவாலயங்கள், கடைகள், ஹோட்டல்கள் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை அறியும் வெளிமக்களுக்கு இது வினோதமாக இருந்தாலும், இந்த மண்ணின் குணத்தை அறிந்த தங்களுக்கு இந்த சுரங்க வீடுகள் தான் பாதுகாப்பானவை என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

Also Read | "இதெல்லாம் ட்ரெய்லர் தான்".. தட்டி வீசப்போகும் கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங் . இந்த இடங்கள் தான் ஹாட்ஸ்பாட்..!😱

COOBER PEDY, AUSTRALIAN MINING TOWN, PEOPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்