'இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு'...அதிரவைக்கும் நேரடி 'வீடியோ காட்சிகள்' !
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த நிலையில், இன்று கொச்சிக்கடை தேவாலயம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது.
ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.உலகையே உலுக்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 290 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இந்த குண்டு வெடிப்பு வெளிநாட்டு சதியுடன் உள்ளூர் இயக்கங்கள் மூலமாக நடத்தப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே இன்று மாலை குண்டு வெடிப்பு நடந்துள்ளது.வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட வாகனத்தை கைப்பற்றிய வெடிகுண்டு மீட்பு துறையினர்,அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இலங்கையில் தேவாலயங்கள் உட்பட அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அரசு!
- '25 வருசத்துக்கு முன்பு இறந்த தந்தையை'...தற்போது 'அடக்கம் செய்த மகன்'...நெகிழ வைக்கும் சம்பவம்!
- 12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..
- 'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல வீரர்'...அதிரடி தடை விதித்த ஐசிசி...அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!