‘முகத்துல பிளாஸ்டிக் கவர் மாட்டி.. நடுரோட்ல நிர்வாணமாக்கி’.. 'சாத்தான்குளம்' சம்பவத்தை மிஞ்சும் 'டேனியல் ப்ரூட்' மரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதாக தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில் நியூயார்க் நகர காவல் துறையினரால் மேலும் கருப்பின இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோவை அந்த இளைஞரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
நியூயார்க்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் டேனியல் ப்ரூட் என்கிற இளைஞர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 30-ம் தேதி இறந்தார். நேற்று வரை அவருடைய இறப்பு பெரிதாகப் பேசப் படாத சூழ்நிலையில் அவருடைய குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் போலீசார் சுற்றி நிற்க, அவர் சாலையில் நிர்வாணமாக இருக்கிறார். அவரின் பின்னால் கை கட்டப்பட்டு விலங்கு பூட்டப்பட்டு இருந்தது. அப்போது பிளாஸ்டிக் பை போன்ற பொருளால் ஒருவர் டேனியலின் முகத்தை மூடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக டேனியல் எச்சில் உமிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக போலீஸ் அவருடைய முகத்தை மூடியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தன் முகத்தில் மூடப்பட்ட பிளாஸ்டிக் பையை அகற்றுவதற்கு டேனியல் போராடியதால், ஆத்திரம் அடைந்த போலீசார் அவர் முகத்தைப் பிடித்து சாலையில் அடித்துள்ளார். இதெல்லாம் அந்த வீடியோவில் பதிவானது.
இதனையடுத்து அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனாலேயே அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார் என்று கூறப்படுகிறது. சிகாகோவிலிருந்து தன் சகோதரர் ஜோ ப்ரூட்டின் வீட்டுக்கு வந்த டேனியல் ப்ரூட் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. திடீரென்று அவர் காணாமல் போனதை அடுத்து 911 என்கிற எண்ணை அழைத்து தனது சகோதரர் காணாமல் போனது குறித்தும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஜோ ப்ருட் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அவரைத் தேடியபோது நியூயார்க் நகரின் மேற்கு பகுதியில் காவல் துறையினரிடத்தில் பிடிபட்டிருந்தது தெரியவந்தது. அப்போது மனநிலை பாதித்தவர் என்றும் யோசிக்காமல் காவல்துறையினர் நிகழ்த்திய கொடூரம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மூச்சுத்திணறல் காரணமாக டேனியலின் இறப்பு நிகழ்ந்ததாக பிரேத பரிசோதனை ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாநகர அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்!'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்!
- ‘நல்லா நியாபகம் இருக்கு!.. இவர எங்கயோ பாத்துருக்கேன்’.. கொரோனா நேரத்திலும் 'இந்த மாதிரி ஆளுகளுக்கு' அடித்த ஜாக்பாட்!
- 'சுத்தியலால் மனைவியின் தலையில்'.. 'ஓங்கி அடித்துக் கொன்ற கணவர்!'... 'கூலாக' சொன்ன 'வியப்பில் ஆழ்த்தும்' காரணம்!
- '38 வயது பெண்ணுடன் ஓடி வந்த இளைஞர்'... 'கொஞ்ச நேரத்துல திபு திபுவென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 ஆண்கள்'... யாருன்னு தெரிஞ்சதும் ஆடி போன போலீசார்!
- 'அம்மாவ விட பெரிய சக்தி என்ன இருக்கு'... 'திடீரென சுருண்டு விழுந்த பெண்'... 'தாயை காப்பாற்ற 5 வயசு சிறுவன் செஞ்ச செயல்'... அசந்து போன போலீசார்!
- ‘திருட்டு’ போனுக்காக தொடங்கிய ‘தொடர்’ கொலைகள்.. சரியாக 1 வருடம் காத்திருந்து.. ‘அண்ணன்’ செய்த ‘குலைநடுங்கும்’ சம்பவம்!
- ‘இப்படி’ ஒரு காரணத்துக்காக ‘துருக்கி’ பயணம்?.. கைதான ‘இளம்பெண்’!.. ‘வெளியான’ அதிர்ச்சி ‘காரணங்கள்’!
- 'மகளை தேடிச்சென்றபோது'... 'கதவை திறந்து ஓடிய நபர்'... 'அதிர்ந்துபோன தாய் உள்ளே பார்க்க'... 'சிறுமி கிடந்த பதறவைக்கும் கோலம்!'...
- ‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
- "நான் டிரஸ் தான்யா ஆர்டர் பண்ணேன்... இதெல்லாம் கூடவா அனுப்புவாங்க...?” - ‘ஆசை ஆசையாக திறந்து பாத்தவருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!